பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

எம

298

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

   

    எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும் என்னையும் போன்று. 

ப. 16.


    தாமரை குடிபோன பொய்கை போன்று. ப. 18.


    அம்பு வாய் உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற்போல. 

ப. 18.


    பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேகங்கள் போன்று. ப. 18.


    எதிரி எளியனானால் பகைவர்கள் கூட நின்று உருமுமாறு போன்று. ப. 19.


    நாட்டார் பொய்யைப் போன்று. ப. 19.


    பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? அது போன்று. ப. 22.


    காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறு போன்று. ப. 22.


    மடல் எடுப்பாரைப் போன்று. ப. 23.


    இருளின் புறவிதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற் போன்று. ப. 24.


    தொட்டார்மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருத்தல் போன்று. ப. 25.


    எரிகின்ற பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று. ப. 27.


    காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள் மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரித்துக்கொண்டு வருவது போன்று. ப. 27.


    வேவ ஆராத வேட்கை நோய் போன்று. ப. 27.


    கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று. ப. 28.


    கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை என்னுமாறு போன்று. பக். 32.


    இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்லவேண்டுவது போன்று. ப. 38.