New Page 1
30 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
முன்பு எல்லாப் பொருள்கட்கும்
ஈஸ்வரனாய் உள்ள தன்மையும் அழிந்தது போலே கிடந்தது; இவர் இழவு தீர வந்து முகங்காட்டின
பின்பு எல்லாப்பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆனான் என்பார், ‘சேராத எப்பொருட்கும் ஆதி’
என்கிறார். பேறு இழவுகள் இவரது அன்றி, ‘தன்னது’ என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்றநின்றானாதலின்
‘சோதிக்கு’ என்கிறார். இதனால், ‘செய்ய வேண்டியனவற்றைச் செய்து முடித்தவனாய் இராநின்றான்’
என்பதனைத் தெரிவித்தபடி. ஆராத காதல் - இத்திருவாய் மொழியில் சொல்லப்பட்ட பொருள்; கண்ணால்
காணப்பட்ட பொருள்கள் எல்லாம் பகவானைப் பெறாத காரணத்தாலே தம்மைப் போலே நோவு படுகின்றனவாகக்
கொண்டு, அவற்றுக்குமாகத் தாம் நோவுபடும்படியான 1அபிநிவேசமாதலின் அதனைத் தெரிவிப்பதற்கு
‘ஆராத காதல்’ என்கிறார். காதல் குருகூர்ச் சடகோபன் - காதலைக் கொண்டே இவரை நிரூபிக்க
வேண்டி இருத்தலின், ‘காதல் சடகோபன்’ என்கிறார். ‘இது, தற்புகழ்ச்சி அன்றோ?’ எனின்,
2தம் படி சொல்லும் போதும் தாமே சொல்ல வேண்டுமே.
சொன்ன அவற்றுள்
- இக்காதலோடே அருளிச் செய்த ஆயிரத்துள் அவற்றுள் இவை பத்தும் - அல்லாதவை ஒரு தலையாக, இத்திருவாய்மொழி
ஒரு தலையாம் படி அக்காதலை வாய் விட்டுக் கூறிய பதிகமாதலின், ‘அவற்றுள் இவை பத்தும்’
என்கிறார். இவை பத்தும் சோரார் விடார் கண்டீர் வைகுந்தம். இங்கே இருந்து, கண்ணுக்கு
இலக்கான பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக அநுசந்திக்குமவர்கள்,
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய
விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள். ‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.
‘திண்ணன’ என்றது, ஐயமின்மையைக் குறிக்க வந்தது. இங்கே உள்ள சிலரைப் பற்றிச் சொல்லிற்று
ஓர் அர்த்த மாகிலன்றே, ஐயம் திரிவுகள் உள்ளனவாம்? பகவானுடைய பிரபாவத்தைப் பற்றிச்
சொன்னதாகையாலே இது தனக்கு எங்கேயாயினும் சூளுறவு செய்யலாம் என்றபடி.
_____________________________________________________________
1. அபிநிவேசம் -ஊக்கமிகுதி;
அன்பின் பெருக்கு.
‘தன்னுடை ஆற்றல் உணரார்
இடையிலும்
2. தன்னைப் புகழ்தலும் தகும்புல
வோர்க்கே’
என்றார் நண்ணூலார்
|