பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஜனஸ

300

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    ஜனஸ்தானம் அடியறுப்புண்ட பின்பு தண்டகாரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று. ப. 86.

    காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்தவனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும் இழ்ந்ததனால் உளதாய துன்பம் ஒத்ததாக இராது வேறுபடுவது போன்று. ப. 89.

    எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால் நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று. ப. 89.

    ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போலே. ப. 92.

    தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீரைப் போன்று. ப. 93.

    கொம்பை இழந்த தளிர் போலே. ப. 94.

    அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாறு போன்று. ப. 95.

    ஜனக மகாராஜன் பிராட்டியினுடைய பேரழகினை நினைந்து, ‘இச் சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று. ப. 96.

    கருமுகை மாலை தேடுவார் சூடுவதற்காகவே தேடுவது; சும்மாட்டைக் கொள்ள அன்று; அது போன்று. ப. 98.

    அரக்கும் மெழுகும் நெருப்பிற்குள் புகில் கரிந்துபோம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து நின்றுழி உருகும்; அது போன்று. ப. 100.

   புழுக் குறித்தது எழுத்தானாற்போன்று. ப. 101.

   விடாயர் இருந்த இடத்தே சாய்கரகம் போலே. ப. 102.

   விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று. ப. 107.

   பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே. ப. 108.

    காதுகரைச் சொல்லுமாறு போன்று. ப. 109.

   தஞ்சம் அல்லாதாரைத் தஞ்சம் என்றிருந்தால் சொல்லுமாறு போன்று. ப. 109.

   ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் போலே. ப. 110.