தம
வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் |
301 |
தம்மையும் மறந்து
உம்மையும் மறந்து உண்டு உடுத்துத் திரியும் சம்சாரிகளைப் போன்று. ப.
112.
தாமரையில் முத்துப்பட்டாற்போன்று.
ப.
113.
காட்டில் எறித்த
நிலாவைப் போன்று. ப.
113.
தமப்பன் செல்வம் புத்திரனுக்குக்
கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று.ப.
115.
குழந்தை வாயில்
முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது
போன்று.ப.
117.
அவ்யானையைத் தன்
திருக்கையாலே குளிர ஸ்பர்சித்து நின்றாற்போலே. ப.
117.
கமர் பிளந்த இடத்திலே
நீர் பாய்ச்சுவாரைப் போன்று. ப.
119.
விடாயர் மடுவிலே
சேருமாறு போன்று. ப.
119,
210.
கற்பகத் தரு
வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன போன்று. ப.
120.
புறம்பு ஒளியாய் உள்ளும்
மண்பற்றி இருக்கை அன்றி நெய்திணுங்கினாற்போன்று. ப.
123.
முத்துக்கோக்க வல்லவன்
முகம் மாறிக் கோத்தவாறே விலை பெறுமாறு போன்று. ப.
125.
அகஸ்தியர்க்கு
உடன் பிறந்தவன் என்னுமாறு போன்று. ப.
125,
275.
எப்போதும் உண்ணாநின்றாலும்
மேன்மேல் என விருப்பத்தை விளைக்கும் அமிருதம் போன்று. ப. 129.
முத்தன், தன்னை
அனுபவிக்கும்போது படுமாறு போன்று. ப.
132.
தமப்பனது தனம் கிடந்தால்
புத்திரன் அழித்து ஜீவிக்குமாறு போன்று. ப.
141.
ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
‘ஆர்ய புத்திர!’ என்னுமாறு போன்றும், திருவாய்ப்பாடியில் பெண்கள் ‘கிருஷ்ண!’ என்னுமாறு
போன்றும். ப.
145.
பகதத்தன் விட்ட சக்தியைத் தன்
அந்தப்புரத்திலே ஏற்றாற்போலே. ப.
148.
|