New Page 1
302 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
செருப்பை வைத்துத் திருவடி
தொழப் புக்காற்போலே. ப.
149.
பெருவெள்ளத்துக்குப் பல
வாய்த்தலைகள் போன்று. ப.
158.
கடலிலே கிடந்த
ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து கரையிலே சேருமாறு போன்று. ப.
163.
பிராட்டியினுடைய சேர்க்கைக்கு
விரோதியாய் இருந்தவனைப் போக்கியது போன்று. ப.
166.
‘விண்ணப்பஞ்செய்வார்கள்’
என்னுமாறு போன்று. ப.
171.
சமிதை பாதி சாவித்திரி
பாதியாமாறு போன்று. ப.
177.
அணைக்குக் கிழக்குப்பட்ட
நீரைப் போன்று. ப.
181.
அம்மி துணையாக ஆறு
இழிந்தவாற்றைப் போன்று. ப.
181.
வாலி போன வழியை
அடைத்து மஹாராஜர் குறும்பு செய்தாற்போன்று ப.
182.
பிராஹ்மணர் செல்வம்
மிகுந்தால் யாகம் செய்யுமாறு போன்று. ப.
184.
சேற்றிலே விழுந்த
மாணிக்கத்தை எடுத்துக் கழுவி விநியோகம் கொள்ளுமாறு போன்று. ப.
186.
எதிர்சூழல் புக்கு
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று. ப.
190.
நாம் நினைத்தவற்றைத்
தலைக்கட்ட ஒட்டாத கர்மம் போன்று. ப.
190.
இராட்சச சாதியில்
விபீஷணன் முதலியோரை வைத்து முருடரான ராவணன் முதலியவர்களை அழித்தாற்போன்று. ப.
199.
நித்திய சூரிகளுக்குத்
தன்னை அனுபவிக்கக் கொடுக்குமாறு போன்று. ப.
199.
குளப்படியிலே கடலை
மடுத்தாற்போன்று. ப.
203.
மாலியவான் தொடக்கமானார்
இராவணனுக்குச் சொன்ன ஹிதம் போலே. ப.
208.
வழிபறிக்கும் நிலத்தில்
தம் கைப்பொருள்கொண்டு தப்பினார் மகிழ்ச்சியையுடையவர்கள் ஆமாறு போன்று. ப.
208.
|