பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்

303

 

     தாய் தந்தையர்கள் இருந்த படுக்கையிலே குழந்தை சென்று ஏறுமாறு போன்று. ப. 210.

     கோடை காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று. ப. 210.


     சேஷ பூதன் அடிமை செய்தல்லது தரியாதது போன்று. ப. 210.


     பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று. ப. 216.


     சில பொருள்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமாறு போன்று. ப. 219.


     உவா அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது என்னுமாறு போன்று. ப. 219.


     கிருஷிகனானவன் ‘ஒரு கால் பதர்த்ததே அன்றோ’ என்று சோம்பிக் கை வாங்காதே மேலே மேலே கோலுமாறு போன்று. ப. 221.


     கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று. ப. 221.


     பொசுக்கின பன்றி போலே. ப. 232.


     மழை பெய்யும் மேகம் போலே. ப. 274.


     குளிர்சுரத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஒருகால் நாக்கு நனைக்க என்னுமாறு போன்று. ப. 260.


     அக்காரம் என்னும் மரமானது கோட்புக்குப் பழுத்த பழம் போன்று. ப. 261.


     ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று. ப. 263.


     அவதாரங்களைப் போன்று. ப. 270.


     சூற்பெண்டுகள் சுரம் ஏறுமாறு போன்று. ப. 273.


     முராசுரன் பல ஆயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டிருந்தது போன்று. ப. 276.


     பெரியோர்களுடைய மனத்தைப் போன்று. ப. 278.


     மறுவற்ற ஆழ்வார் திருவுள்ளம் போன்று. ப. 278.


     திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினாற்போன்று. ப. 282.