ப
304 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
பிற்சேர்க்கை -V
பெரியார்களைப் பற்றிய
குறிப்பு
அம்மங்கி அம்மாள்
: இவர், எம்பெருமானாரால் திருத்திப் பணிகொள்ளப்பட்ட
அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய மாணாக்கர்; அன்பில் தாய் ஒத்தவர் ஆதலின், ‘அம்மாள்’
என்று வழங்கப்பட்டார். ‘இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, சப்த ஸ்வாரஸ்யத்தைப்பற்ற
எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்றுண்டு; அம்மங்கி அம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப்
போரும்,’ என வியாக்கியானத்தில் இவரைப்பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. (பக். 21) இப்பத்தில் வந்துள்ள மற்றைப் பெரியோர்களைப்
பற்றிய குறிப்புகளை முதற்பத்து ஈட்டின் தமிழாக்கத்தின் ஈற்றில்
காண்க.
|