ச
306 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
சிறந்தது,
கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய
சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம், வேறுவே
றுருவி னொருதொழி லிருவர்த்
தாங்கு நீணிலை
யோங்கிருங் குன்றம்;
15. நாறிணர்த்
துழாயோ னல்கி னல்லதை
ஏறுத லெளிதோ
வீறுபெறு துறக்கம்?
அரிதிற்பெறு துறக்க
மாலிருங் குன்றம்
எளிதிற்பெற
லுரிமை யேத்துகஞ் சிலம்ப!
அராவணர் கயந்தலைத் தம்முன்
மார்பின்
20. மராமலர்த் தாரின் மாண்வரத்
தோன்றி
அலங்கு மருவி
யார்த்திமிழ் பிழியச்
சிலம்பா றணிந்த
சீர்கெழு திருவிற்
சோலையொடு
தொடர்மொழி மாலிருங் குன்றம்
தாம்வீழ்
காமம் வித்துபு விளைக்கும்
25.
நாமத் தன்மை நன்கனம் படியெழ
______________________________________________________
10-14. அக்குலவரைகள்
சிலவற்றிலும் கல்லென அறையும் கடலும் கானலும் போல வேறு வேறாகிய நிறத்தினையும், பிரிவில்லாத
சொல்லும் பொருளும் போல வேறுபடாத தொழிலினையுமுடைய மாயோனையும் தம் முன்னோனையுந் தாங்கும்
நீண்ட நிலைமையினையுடைய புகழான் உயர்ந்த இருங்குன்றம் சிறந்தது. ‘புகழான்’
என்பது வருவிக்கப்பட்டது.
15. நல்கினல்லது - வெளிப்பட்டுக்
கொடுப்பினல்லது.
17-8. அவ்வரிதிற்பெறு
துறக்கத்தை எளிதிற்பெறுதலுரிமை யான் மாலிருங்குன்றத்தை எல்லோருங் கேட்க ஏத்தக் கடவோம்,’
என்று ஏத்துகின்றார்.
19. அரவின் மெல்லிய தலையாற்கவிக்கப்பட்ட
தம்முன்.
20. மராம் - வெண்கடம்பு.
21-2. அசையும்
அருவி மிக ஆர்த்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த இவ்வியக்கத்தக்க இருங்குன்றத்து (26)
22-6. ‘அழகு
பொருந்திய ‘திரு’ என்னுஞ் சொல்லொடும் சோலை யென்னும் சொல்லொடும் மாலிருங்குன்றம் என்னுஞ்
சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலைமலையென்னும் நாமத்தினது பெருந்தன்மை நன்றாகப்
பூமியின்கட்பரக்க, மகளிரும் மைந்தரும் தாம் வீழ்காமத்தை வித்தி விளைக்கும் யாமத்தியல்பையுடைய
இவ்வையிருங் குன்றத்து’ எனக் கூட்டுக.
|