பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பரிபாடல்

307

 

          யாமத் தன்மையிவ் வையிருங் குன்றத்து
          மன்புன லிளவெயில் வளாவவிருள் வளர்வெனப்
          பொன்புனை யுடுக்கையோன் புணர்ந்தமர் நிலையே
          நினைமின் மாந்தீர்! கேண்மின் கமழ்சீர்


     30.   சுனையெலா நீல மலரச் சுனைசூழ்
          சினையெலாஞ் செயலை மலரக் காய்கனி
          உறழ நனைவேங்கை யொள்ளிணர் மலர

         மாயோ னொத்தவின் னிலைத்தே
         சென்றுதொழு கல்லீர்! கண்டுபணி மின்னே


     35.  இருங்குன் றென்னும் பெயர்பரந் ததுவே
         பெருங்கலி ஞாலத்துத் தொன்றியல் புகழது
         கண்டுமய ரறுக்குங் காமக் கடவுள்

          மகமுயங்கு மந்தி வரைவரை பாய
          முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட   

______________________________________________________

     26. குறிஞ்சிக்குச் சிறுபொழுதாகலான் யாமங் கூறினார்.


     27-8. நிலை பெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பீதாம்பரத்தையுடையோன் தம்முன்னொடு கூடி அமர்ந்து நிற்கும் நிலையை.


     29. மாந்தீர்! நினைமின்; இனி, அம்மலையது சிறப்பைக் கேண்மின்.


     30-33. சுனையெல்லாம் நீலமலர அச்சுனை சூழ்ந்த செயலை சினையிடமெல்லாம் மலர்தலானும் காய்கனிகளொடு நிறம் மாறுபட வேங்கை இணர் மலர்தலானும் மாயோனையொத்த இனிய நிலைமையையுடைத்து.
நீலமலரைச் சூழ்ந்த செயலை மலர் அவன் பொன்புனை உடுக்கைக்கு ஒப்பு; குன்றத்துக் காய்கனியுறழ மலர்ந்த வேங்கை அவன் மணி முடிக்கு ஒப்பு.


    34-7. பெருங்கலி ஞாலத்து இருங்குன்றென்னும் பெயர் பரந்த அத்துணையே பழைதாய் இயல்கின்ற புகழையுடைய அது காணமயரை அறுப்பதொரு வழிபடு தெய்வம்; அதனால், சென்று அவனைத் தொழமாட்டாதீர்! அதனைக் கண்டு பணிமின்.


    38. மகவால் முயங்கப்பட்ட மந்தி ஒரு சிகரத்தினின்று ஒரு சிகரத்திற்பாய


    39. முகிழ் நெருங்கின முல்லை, மகளிர் கற்பு நிகழ்ச்சியைக்காட்ட