40
|
308 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
40. மணிமருணன் னீர்ச்சினை மடமயி லகவக்
குருகிலை யுதிரக்
குயிலினங் கூவப்
பகர்குழல் பாண்டி லியம்ப வகவுநர்
நாநவில் பாடன் முழவெதிர்ந் தன்ன
சிலம்பிற் சிலம்பிசை யோவா
தொன்னார்க்
45. கடந்தட்டான் கேழிருங்
குன்று
தைய லவரொடுந் தந்தா ரவரொடும்
கைம்மக வோடுங்
காத லவரொடும்
தெய்வம் பேணித் திசைதொழுதனிர் சென்மின்;
புவ்வத் தாமரை புரையுங்
கண்ணன்
50. வவ்வற் காரிருண்
மயங்குமணி மேனியன்
எவ்வயி னுலகத்துந் தோன்றி யவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ யிருங்குன்
றத்தான்
_______________________________________________________
40-45. சினையிடத்தவாகிய
மணிமருள் மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கணிருந்து குயிலினம் கூவவும், முழைக்கட்
சிலம்புகின்ற எதிரொலி ஓவாது, அவுணரை நேரே பொருது கொன்றானது
நிறத்தையுடைய குன்றத்தின்கண்.
42-3. சுருதியையுணர்த்துகின்ற
குழலும் தாளமும் இயம்ப அவற்றைப் பாடுவாரது மிடற்றுப்பாடலும்
முழவோசையும் எதிர்ந்தாற்போன்ற
இசையென்ற வழி, குழலொலியும் மிடற்றுப்பாடலும்
குயிலினத்தது கூவற்கும் அதன் எதிரொலிக்கும் உவமை.
தாள ஒலியும் முழவொலியும் மயிலது அகவற்கும் அதன்
எதிரொலிக்கும் உவமை.
மந்தி பாய
(38) முல்லை காட்ட (39) என நின்ற செயவெனெச்சங்கள், இசையோவாதென்னும் (44) பிற வினை கொண்டன.
46-8. அதனை
நும் மனைவியரொடும் இருமுதுகுரவரொடும் குழவிகளோடும்
சுற்றத்தோடுங்கூடத் தெய்வமாக மதித்துத் திசை நோக்கித்
தொழுது சென்மின்.
49-53. தன் நாபிகமலத்தையொக்கும்
கண்ணையுடையனாய், நீரை வௌவுதலையுடைய மேகமும் இருளும்
நீலமணியும் போலுமேனியனாய், எல்லா உலகினும்
வெளிப்பட்டு அவ்விடத்து உயிர்ப்பன்மையது மறுக்கத்தைச்
செய்யும் பிறவித்துன்பத்தைக் களைவோன் அன்பு பட்டு
இருங்குன்றத்தின்கண்ணான் ஆதலால்
புவ்வமென்பது (49) பாகதச் சிதைவு.
|