பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

310

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

 

சிலப்பதிகாரம்


மதுரைக்காண்டம்


11. காடு காண் காதை


        
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின்,
          பெருமால் கெடுக்கும் பிலமுண்டு; ஆங்கு
          விண்ணோ ரேத்தும் வியத்தகு மரபிற்
          புண்ணிய சரவணம் பவகா ரணியொ


     95.   டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
          விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
          முட்டாச் சிறப்பின் மூன்றுள; ஆங்குப்
          புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
          விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்;


     100.  பவகா ரணிபடிந் தாடுவி ராயின்,
          பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்;
______________________________________________________

      ‘திருமால் குன்றத்துச் செல்லக்கடவீராயின், அவ்விடத்தே மிக்க
மயக்கத்தைக் கெடுக்கும் பிலத்து நெறியுண்டு’ என்றான் என்க.
      திருமால் குன்றம் - அழகர் திருமலை.


      92. ஆங்கு - அப்பிலத்துக்குள்ளே.


      93-7. விண்ணோரேத்தும்
  மூன்றுள.


     ‘தேவர்களாலேத்தப்படுதலின், யாவரும் வியக்கத்தகும் மரபினையுடைய
‘புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி’ என்னும் பெயர் எங்கும்
பரக்கப்பட்டு இடையறாத சிறப்பினையுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற
மூன்று பொய்கைகள் உள’ என்றான் என்க.

      97. ஆங்கு - அவற்றுள்.


      98-9. புண்ணிய சரவணம்
  எய்துவிர்.
      ‘புண்ணிய சரவணமென்னாநின்ற பொய்கையில் ஆடுவிராயின்,
இந்திரனாற்செய்யப்பட்ட ஐந்திரவியாகரணமென்னும் இலக்கணத்தை உணர்வீர்,’
என்றானென்க.
      இது நினைவின்றிப் பெறும் பேறு.
      பொருந்துதல் - ஆடுதல். எய்துதல் - உணர்தல்.


      100-101. பவகாரணி . . . . . . . . . . . எய்துவிர்.
      ‘அதுவன்றிப் பவகாரணியென்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின்,
இப்பிறப்பிற்குக் காரணமாகிய பழம்பிறப்பையுணர்வீர்’ என்றானென்க.