|
இட
இட்ட சித்தி
யெய்துவி
ராயின்,
இட்ட சித்தி யெய்துவிர் நீரே;
ஆங்குப் பிலம்புக வேண்டுதி
ராயின்,
105. ஓங்குயர்
மலையத் துயர்ந்தோற் றொழுது
சிந்தையி லவன்றன்
சேவடி வைத்து
வந்தனை
மும்முறை மலைவலஞ் செய்தால்
நிலம்பக வீழ்ந்த
சிலம்பாற் றகன்றலைப்
பொலங்கொடி
மின்னிற் புயலைங் கூந்தற்
110. கடிமல ரவிழ்ந்த கன்னிகா
ரத்துத்
தொடிவளைத் தொளி
யொருத்தி தோன்றி
______________________________________________________
‘முன்னும் பின்னுமாகிய
இரு பிறப்பையும் உய்த்துணர்தற்குக் காரணமாகிய
இப்பிறப்பிலே எப்பிறப்பையும் எய்த வுணர்வீர்’
என்றானெனினுமமையும், இனிப்
பவமென்பதனை விகாரமாக்கிப் ‘பாவத்தான் வரும் பிறப்புகளை’
எனலுமாம்.
102-3. இட்டசித்தி
நீரே.
‘அதுவன்றி இட்டசித்தியென்னும்
பொய்கையில் ஆடுவீராயின், நீர் நினைத்தவெல்லாம் எய்துதலையுடையீர்,’
என்றானென்க.
இனி, ‘எண்வகைச்
சித்திகளையும் தவம் செய்து வருந்திப் பெறாமல்
நினைத்துழிப் பெறுவீர்,’ என்றான் எனினும்
அமையும்.
104. ஆங்குப் பிலம்புக
வேண்டுதிராயின் - ‘அங்ஙனமாகிய அப்பிலத்துக்கட்புகுதலை விரும்புவீராயின்’
என்றானென்க.
105-7. ஓங்குயர்
மலையத்து
மலை வலஞ்செய்தால்
‘மிகவுமுயர்ந்த அத்திருமலைக்கணுள்ள
பெரியோன் சேவடிகளைக்
கையாற்றொழுது மனத்தானினைந்து வாக்காற்றுதித்தலுடனே
அம்மலையை
மும்முறை வலஞ்செய்தால்’ என்க.
அத்து - சாரியை,
வைத்தல் - நினைத்தல், தியானம். வந்தனை -ஈண்டுத்
துதித்தல். ‘தொழுது வைத்து வந்தனைநோடு
வலஞ்செய்தால்’ என்க.
108-11. நிலம்பக வீழ்ந்த
ஒருத்தி
தோன்றி
‘பாதாள கங்கைக்கு
மேலுள்ள நிலம் கூறுபடும்படி அறுத்துத் தாழ்ந்த
*சிலம்பாறென்னும் அகற்சியையுடைய
ஆற்றினது கரைக்
______________________________________________________
* சிலம்பாற்றினை ‘நூபுரங்கை’
என்பர்.
|