New Page 1
|
312 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘இம்மைக்
கின்பமு மறுமைக் கின்பமும்
இம்மையு
மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையி
னிற்பதுஞ் செப்புமி னீயிரிவ்
115. வரைத்தாள் வாழ்வேன்
வரோத்தமை என்பேன்
உரைத்தார்க்
குரியே னுரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்
______________________________________________________
கண்ணதாகிய
விளக்கத்தையுடைய முகைகள் அவிழ்ந்த மலரையுடையதோர்
கோங்கின் நிழற்கண்ணே ஒரு பொற்கொடி போலவும் மின்
போலவும் புயல்
போலவும் ஐவகைக் கூந்தலையும் வளைந்த தொடி புனைந்த
தோளினையுமுடையாளொருத்தி தோன்றி’ என்க.
சிலம்பாறு - அவ்வியாற்றின்
பெயர், தலை - இடம், இன் - உவமவுருபு,
கன்னிகாரம் - கொங்கு, தொடி - வளைவு, ஒருத்தி -ஓர்
இயக்கி.
112-7. இம்மைக்
கின்பமும்
.
கதவெனும்.
‘அங்ஙனம் தோன்றினவள்,
‘இப்பிறப்பிற்கு இன்பமும் மறுபிறப்பிற்கு
இன்பமும் இவையிரண்டு மொழிந்து எக்காலத்தும் ஒன்றாந்
தன்மையாய்க்
கோட்டமின்றி அழிவற நிற்கும் இன்பமுமாகிய பொருள்கள் யாவை?
அவற்றை
நீயிர் உரைமின்; யான் 1இத்தாள் வரைக் கண்ணே
வாழ்வேன்;
வரோத்தமையென்று கூறப்படுவேன்;
யான் வினாய இவற்றை உரைத்தார்
உளராயின், அவர்க்கு எத்தொழிற்குமுரியேன்; ஆதலின்,
திருத்தக்கீர்!
உரைத்தீராயின், உமக்கு இப்பொழுதே இப்பிலவாயிற்கதவம்
திறந்து தருவேன்
என்று சொல்லும்’ என்றான் என்க.
இம்மைக் கின்பம்
- புகழ், மறுமைக் கின்பம் - புண்ணியம், செம்மையில்
நிற்பது - மோக்கம். இனி, ஒருவர்க்கு இம்மை
மறுமைகட்கு இன்பத்தைத் தந்து
பூமியுள்ளளவும் நிற்பது புகழெனலுமாம்; 2‘ஒன்றாவுலகத
தொன்றில்’ எனவும்,
3‘இவணிசை யுடையோர்க் கல்லதவண, துயர்நிலை யுலகத் துறையு
ளின்மை,
விளங்கக் கேட்ட மாறுகொல்’ எனவுங் கூறினாராகலின். ‘கதவந்
திறத்தற்குரியேன்’
எனவுமாம். திறந்தேன் - காலமயக்கம்; விரைபொருட்கண்
வந்தது.
______________________________________________________
1. அடிமலையைப் ‘பாதசைலம்’
எகன்று வடநூலார் கூறுதலின், தாள் வரை என்றார்.
2. திருக். 233.
3. புறநா. 50.
|