|
கதவந
கதவந் திறந்தவள்
காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள
போகிடை கழியன
120. வொட்டுப்
புதவமொன் றுண்டத னும்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி,
‘இறுதியி லின்ப
மெனக்கீங் குரைத்தாற்
பெறுதிர்
போலுநீர் பேணிய பொருள்’ எனும்;
‘உரையீ ராயினு முறுகண்
செய்யேன்
125. நெடுவழிப் புறத்து
நீக்குவ னும்’எனும்;
உரைத்தா ருளரெனி னுரைத்த
மூன்றின்
கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும்;
______________________________________________________
118-23.
கதவந் திறந்தவள் பேணிய
பொருளெனும்.
‘அவருரைப்பின், அவள் கதவைத்
திறந்து இதுவென்று காட்டிய நல்ல
வழியில் நீண்ட இடைகழி வாயில்கள் பல உள; அவை கழிந்தால்,
இரட்டைக்
கதவையுடைய வாயிலொன்று உண்டு; அதற்கு மேலாகச் சென்றால்
வட்டிகையிலே எழுதின பாவை
போல்வாளொருத்தி வெளிப்பட்டு, ‘ஈறில்லாத
இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீயிர் இம்
முப்பொருளிலும் விரும்பிய
பொருளைப் பெறுவீர்’ என்னும் என்றாளென்க.
புதவம் - வாயில், போகு -
நெடுமை, ஒட்டுப்புதவம் - இரட்டைக் கதவம்,
உம்பர் - மேல், பூங்கொடி-உவமப்பெயர்; அன்றித்
‘துவார
வட்டிகையிற்பூங்கொடி அங்ஙனம் கேட்கும்’ எனவுமாம். இறுதியில் இன்பம் -
வீடு. பெறுதிர்- முன்னிலைப் பன்மை. போலி - ஒப்பில் போலி.
124-5. உரையீராயினும் நீக்குவன நும்மெனும்.
வினாயவள், ‘யான் வினாயதனை
நும் பேதைமையான் உரையீராயினும் நும்மை
லருத்தஞ்செய்யேன்; நீர் போகக் கடவ நெடுநெறிக்
கண்ணே நும்மைப்
போக்குவன்’ என்னும் என்றான் என்க.
126-7. உரைத்தாருளர் பெயரும்.
‘அவள் அங்ஙனங் கேட்ட
பொருளை உரைத்தாருளராயின், முற்கூறப்பட்ட
பொய்கை மூன்றின் கரைக்கட்செலுத்தி அவை இவையென்று
காட்டி மீளும்,’
என்றானென்க.
ஆங்கு -அசை.
|