அ
|
314 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
அருமுறை
மருங்கி னைந்தினு மெட்டினும்
வருமுறை யெழுத்தின்
மந்திர மிரண்டும்
130. ஒருமுறை யாக
வுளங்கொண் டோதி
வேண்டிய தொன்றின்
விரும்பினி ராடின்
காண்டகு மரபின
வல்ல மற்றவை
மற்றவை நினையாது
மலைமிசை நின்றோன்
பொற்றா மரைத்தா
ளுள்ளம் பொருந்துமின்;
135. உள்ளம்
பொருந்துவி ராயின், மற்றவன்
புள்ளணி நீள்கொடி
புணர்நிலை தோன்றும்;
______________________________________________________
128-32. அருமறை
மருங்கின் . . . . . . . . . . மற்றவை
‘ஓதவும் உணரவுமரிய மறையிடத்தனவாகிய
ஐந்தானும் எட்டானும்
வருமுறைப்பட்ட எழுத்தினையுடைய மந்திரமிரண்டையும் ஒரு
தன்மையாக
மனத்தானினைந்து வாக்காற்றுதித்து, அவற்றுள் வேண்டியது
யாதொன்று,
அதனில் விரும்பினீராயாடின், அவற்றின் பயனாயவை,
தவங்களைச்
செய்தோர்க்கும் காணத் தகும் மரபினையுடைய வல்ல’
என்றானென்க.
இனி, ‘அங்ஙனமாகிய
பொய்கைகளின் பயனை விரும்பினீராய்
ஒன்றினாடின், அதன் பயனை நுகர்ந்த நெஞ்சம் பிறிதொன்றனையும்
காதலியாது,’ எனலுமாம். இன்னும், ‘மற்றவை காண்டகு மரபினவல்ல’
என்பதற்கு,
‘இவையொழிந்த தீர்த்தங்கள்
இவை போலக் கைமேற்காணத் தகும்
மரபினையுடையவல்ல,’ எனினும் அமையும்.
138-8. மற்றைவை நினையாது
துயர் கெடுக்கும்.
‘அங்ஙனமாகிய
பொய்கைகளின் பயனை விரும்பீராயின், அவற்றை
நினையாதே அம்மலைமீது நின்றோனுடைய பொலிவு
பொருந்திய தாமரை மலர்
போலும் தாள்களை நினைமின்கள்; அங்ஙனம் நினைப்பீராயின்,
அப்பொழுதே
அவனது கருடப்புள் எழுதிய கொடித் தண்டு பொருந்தி நிற்கும்
நிலையிடத்தைக்
காண்பீர்; கண்டவளவிலே அவன் திருவடி நிலை நும்மை
எடுத்துக்கொண்டு
பிறவித் துன்பத்தைக் கெடுக்கும்,’ என்றான் என்க.
‘நீயிர் ஆண்டுச் சென்று
அது காண்பீர்’ என்பான், ‘தோன்றும்’
என்றான். கெடுக்கும் - முற்று.
|