பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

இரண

32

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

இரண்டாந்திருவாய்மொழி

‘திண்ணன் வீடு’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின், ‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்துபோமித்தனை என்று இருந்தார். பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்; ‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே, மற்றைப் பொருள்களினுடைய வேறு இழவுகளில் அளவு அல்லாத இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது; அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதப்படியாய், கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய 2வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி. ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, 3எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாகையாலேயாய் இருந்தது; ‘இது தனக்கு அடி என்?’ என்று பார்த்தவாறே, சர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது. ‘ஆயின், சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருப்பின், சர்வேஸ்வரனாயும், இருத்தல் வேண்டுமோ?’ எனின், ‘உயர்வற உயர் நலம் உடையவன்’ என்றால், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்றே தோன்றுமாதலின், எல்லா நலமும் உடையவனே அமரர்கள் அதிபதியாயும் இருத்தல் வேண்டும். ஆக, இவ்வகையில் ஒன்றைப்

_____________________________________________________________

1. ‘குன்றம் உருண்டால் குன்றி வழியடை ஆகாதவாறு போலவும் யானை தொடுவுண்ணின்
  மூடும் கலம் இல்லது போலவும், கடல் வெம்பினால் விளாவ நீரில்லது போலவும்’(இறை,
  களவியலுரை) என்னும் பகுதி ஈண்டு ஒப்பு நோக்குக.

2. வைலக்ஷண்யம் - வேறுபட்ட சிறப்பு.

3. ‘சமஸ்த கல்யாண குணாத்மகன்’ என்பது, ‘நற்குணக்கடலாய் உள்ளவன் இறைவன்,’
  என்றபடி.

4. திருவாய். 1. 1 : 1

  ‘இறைவன் பொருளசேர் புகழ்புரிந்தார் மாட்டு’ என்ற திருக்குறளையும், ‘இறைமைக்
  குணங்களிலராயினாரை உடையரெனக் கருதி அறிலிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள்
  சேராவாகலின், அவை முற்றுமுடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனபட்டது,’
  என்ற அதனுரையையும் ஈண்டு ஒப்பு நோக்குக.