பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பற

இரண்டாந்திருவாய்மொழி - முன்னுரை

33

பற்றி ஒன்றாக இடத்திற்கு ஏற்பத் தோன்றிய இறைமைத் தன்மையினை அருளிச் செய்கிறார். 1இத்திருவாய்மொழியில்.

    இனி, ‘மேல் திருவாய்மொழியின் ஈற்றில், ‘மூவா முதல்வா’ என்றார்; அங்கு ‘முதல்வா’ என்றதனால் தோன்றிய முதன்மையினை - காரணத்வத்தை - இத்திருவாய்மொழியில் விரித்து அருளிச்செய்கிறார்,’ என்று பனிப்பர் திருக்குருகைப்பிரான் பிள்ளான்.

    ‘ஆயின், முதல்  திருவாய்மொழியிலும் சர்வேஸ்வரனாந் தன்மையினை அருளிச் செய்தனரே?’ எனின், 2‘ஒருகால் சொன்னோம்’ என்று கைவாங்கி இருக்க வல்லர் அல்லர் இவர்; ஒருகால் சொல்லிற்று என்று கைவாங்கி இருக்கலாம் விஷயம் அல்லன் அவன், இனி, பகவத் விஷயத்தில் கூறியது கூறல் என்ற குற்றமும் ஆகாது. ‘யாங்ஙனம்?’ எனின், ஒரு குணத்தையே எல்லாக்காலமும் அநுபவிக்க வல்லார் ஒருவர் இவர்; ஒரு குணந்தன்னையே ‘இதற்கு முன்பு அநுபவிப்பித்தது இக்குணம்’ என்று தோன்றாதபடி கணந்தோறும் புதுமை பிறப்பித்து அநுபவிப்பிக்க வல்லான் ஒருவன் அவன். ‘ஆயின் ‘கணந்தோறும் புதுமை தோன்றுமோ?’ எனின், பயிலா நிற்கச் செய்தே 3‘பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் யாம் என்றே பயில்கின்றாளால்’ என்றார் திருமங்கை மன்னன்; 4‘எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம்’ என்றார் இவர் தாமும். ஆகையாலே அன்றோ, ஒரு பொருளே நித்தியப் பிராப்பியம் ஆகிறது? ஆயினும், முதல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய் மொழிக்கும் வேற்றுமையும் உண்டு; முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவம், சுவாநுபவமாய் இருக்கும்; இங்கு, அந்தப் பரத்துவந்தன்னை எல்லாரும் அநுபவிக்கலாம்படி பிறர் நெஞ்சிலே படுத்துகிறார் ஆகையாலே பரோபதேசமாய் இருக்கும். இங்கு விதி

_____________________________________________________________

1. இதனால், மேல் திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் பொருள் இயைபு அருளிச்
  செய்கிறார்.

2. முதல் திருவாய்மொழியில் கூறிய பரத்துவத்தையே ஈண்டும் கூறுவது, கூறியது கூறல்
  ஆகாமைக்குக் காரணம் அருளிச்செய்கிறார் ‘ஒருகால் சொன்னோம்’ என்றது முதல்
  ‘இங்கு அவதார்ங்களில் முதன்மை’ என்றது முடிய.

3. பெரிய திருமொழி. 8 .1 : 9.

4. திருவாய். 5. 5 : 4.