New Page 1
34 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
முகத்தால் பரத்துவத்தை
அருளிச்செய்தார்; இங்கு 1விதிமுகம் மறைமுகம் என்னும் இரண்டாலும் பரத்துவம்
சொல்லுகிறார். அங்கு, 2சுருதிச் சாயையாலே பரத்துவஞ் சொன்னார்; இங்கு, இதிகாச
புராணங்கள் மூலமாகப் பரத்துவஞ்சொல்லுகிறார். 3அங்கு, முதன்மையில் முதன்மை; இங்கு
அவதாரங்களில் முதன்மை.
122
திண்ணன் வீடு முதல்
முழுதும்ஆய்
எண்ணின் மீதியன்
எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம்
உடன்உண்டநம்
கண்ணன் கண்அல்லது
இல்லைஓர் கண்ணே.
பொ - ரை :
என்றும் அழியாத பரம்பதம் முதலான எல்லா உலகங்கட்கும் உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களையுடையவனாய்,
அக்குணங்களைக் காட்டி என்னை அடிமை கொண்டவனாய், இவ்வுலகம் தெய்வ உலகம் முதலான எல்லா உலகங்களையும்
ஒருசேர உண்டவனாய் உள்ள நம் கண்ணபிரானே உலகத்திற்கு எல்லாம் களைகண்; அவனை அல்லது களைகண்
ஆவார் ஒருவரும் இலர்.
வி-கு :
திண்ணன் என்பது, திண்ணம் என்பதன் விகாரம். திண்ணம் என்பது, வீட்டிற்கு அடைமொழி. இனி,
இதனை ‘இல்லை ஓர் கண்; இது திண்ணம்’ எனக்கூட்டிப் பூட்டுவிற்பொருள் கோளாக உரைத்தலும்
அமையும். இனி, ‘திண் நல்’ எனப்பிரித்தலுமாம்.
ஈடு :
முதற்பாட்டு, இத்திருவாய்மொழியில் சொல்லப்புகும் பரத்துவத்தைத் தொகுத்து அருளிச்செய்கிறார்.
திண்ணன் வீடு முதல்
முழுதுமாய் - திண்ணியதான பரமபதம் தொடக்கமான எல்லா உலகங்களையுமுடையனாய். திண்ணம்
_____________________________________________________________
1. ‘எல்லாம் உடன் உண்ட
நம் கண்ணன்’ என்றது, விதிமுகத்தாற் கூறியது. ‘அல்லது
இல்லை ஓர் கண்’ என்றது மறைமுகத்தாற்கூறியது.
2. ‘சுருதிச்சாயை’ என்றது,
சாமாநாதிகரண்யம். ‘இதிகாச புராணங்கள் மூலம்’ என்றது,
வையதிகரண்யம்; மா பாவம் விட அரற்குப்
பிச்சை பெய் கோபாலன்’ என்றது
போல்வனவற்றைத் திருவுளத்தே கொண்டு கூறுகிறார்.
3. ‘அயர்வறும் அமரர்கள்
அதிபதி’ என்பதை நோக்குக. ‘இங்கு அவதாரங்களில் முதன்மை’
என்றது, ‘எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண்’ என்றது போல்வனவற்றைத்
திருவுளத்தே கொண்டு அருளிச்செய்வது.
|