|
266
266
கூடிவண்டு அறையும்
தண்தார்க்
கொண்டல்போல்
வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில்
குருகூர்
வண்சட கோபன்
சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர்
பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.
பொ-ரை :
‘வண்டுகள்
கூடி ஒலிக்கின்ற குளிர்ந்த மாலையைத் தரித்த காளமேகம் போன்ற நிறத்தையுடையவனை, சுற்றிலும்
அலர்ந்த சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த உதாரகுணத்தையுடைய ஆழ்வார் அருளிச்செய்த
இசையோடு கூடின ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துத் திருப்பாசுரங்களையும்
கற்க வல்லவர்கள் பிரிவில்லாத பேரின்பத்தைப் பெற்று, அமரர்களால் மொய்க்கப்பட்டு விரும்பப்படுவார்கள்,’
என்றவாறு.
வி-கு :
‘வல்லார் விரும்புவர்,’ என்க. விரும்புவர் - செயப்பாட்டு வினைப்பொருளது. ‘விரும்பப்படுவர்’
என்பது பொருள்.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்கள் நித்திய கைங்கரியத்தைப் பெற்று,
அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’ என்கிறார்.
கூடி வண்டு அறையும்
தண் தார் கொண்டல் போல் வண்ணன்றன்னை - ‘கிண்ணகத்திலே இழிவாரைப்போன்று வண்டுகளானவை திரண்டு
தேனைக் குடித்து ஒலிக்கின்ற சிரமத்தைப் போக்குகின்ற மாலையையும், சிரமத்தைப் போக்குகிற மேகம்
போன்றிருக்கின்ற திருமேனியையுமுடைய சர்வேசுவரனை. இத்திருப்பதிகத்தில் பரக்கச்சொன்ன விபூதி
முழுதும், தோளில் தோள் மாலையைப் போன்று அவனுக்குத் தகுதியாயிருக்கிறபடியைக் கண்டு கூறினேன்,’
என்பார், ‘வண்டு கூடி அறையும்
_____________________________________________________
1. ‘இவையும் ஓர்
பத்தும் வல்லார் வீடில போகமெய்தி விரும்புவர் அமரர்
மொய்த்தே’ என்பதனைக் கடாக்ஷித்து,
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. கிண்ணகம் -
வெள்ளம்.
|