|
வன
வன் என்றார்; ஒன்பதாம்
பாட்டில், அவனுடைய விபூதியின் விரிவைத் தனித்தனியே பேசமுடியாமையாலே ‘சேதன அசேதனங்களை விபூதியாகவுடையவன்’
என்று சுருங்க அருளிச்செய்தார்; பத்தாம் பாட்டில், ‘இவற்றுக்கும் உள்ளுயிராய்ப் பரந்து நின்றாலும்
அவற்றினுடைய தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப் பலஞ்சொல்லித்
தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
புகழ்ஒன்று மால்எப்
பொருள்களுந் தானாய்
நிகழ்கின்ற நேர்காட்டி
நிற்க - மகிழ்மாறன்
எங்கும் அடிமைசெய
இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான்மொய்ம் பால்.
(14)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|