ஐந
ஐந்தாந்திருவாய்மொழி
- ‘மொய்ம்மாம்பூம்பொழில்’
முன்னுரை
ஈடு :
1‘புகழும்
நல் ஒருவன்’ என்ற திருவாய்மொழியிலே, பகவானுடைய சொரூப ரூப குண விபூதிகளை அனுபவித்து, அதனால்
வந்த ஹர்ஷப் பிரஹர்ஷத்தாலே களித்து அவ்வனுபவமில்லாதாரை நிந்தித்து, அவ்வனுபவமுடையாரைக்
கொண்டாடிச் சொல்லுகிறது ‘மொய்ம்மாம்பூம்பொழில்’ என்ற இத்திருவாய் மொழி. இவர் ‘முந்நீர்
ஞாலம்’ என்ற திருவாய்மொழியில், சரீர சம்பந்தத்தை அநுசந்தித்தும், மற்றைய விஷயங்களில்
ஈடுபாட்டினை அநுசந்தித்தும் சோகித்த சோகம் சிலர்க்கு நிலமாகில் அன்றோ, இத்திருவாய்மொழியில்
பகவானை அனுபவித்த அனுபவத்தாலே மகிழ்ச்சி கொண்டவரான இவருடைய மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது?
‘ஆயின், இவரும் பகவானை அனுபவம் பண்ணுகிறார்; நாமும் அவ்விஷயத்திலே கைவைக்கிறோம்;
இவருக்கு இங்ஙன் இருப்பான் என், நமக்கு இங்ஙன் இராதொழிவான் என்?’ என்னில், நாமாகிறோம்
கண்டார்க்கு ஒளிக்க வேண்டுமவையாய், சாஸ்திரங்களெல்லாம் ஒருமுகஞ்செய்து நீக்குகின்றவையாய்,
முதல்தன்னிலே கிடையாதவையாய், கிடைத்தாலும் நிலை நில்லாதவையாய், பின்னர் நரகத்திலே மூட்டிக்
கேட்டினை விளைக்கக்கூடியனவான மற்றைய விஷயங்களினுடைய லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியுமே
ஆயிற்று அறிவது.
‘நன்று; ஆசையற்றவராய்,
சத்துவ குணத்தையுடைய பெரியோர்கட்குத் தலைவராய் இருக்கிற இவர்க்குச் சாஸ்திரங்கள் ‘கூடாதவை’
என்று விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் கூடினபடி
____________________________________________________
1. ‘புகழும் நல்
ஒருவன்’ என்றது முதல் ‘இத்திருவாய்மொழி’ என்றது முடிய,
இத்திருவாய்மொழியில் கூறப்படும்
பொருளைச் சுருங்க அருளிச்செய்கிறார்.
‘இவர்’ என்றது முதல் ‘மகிழ்ச்சி சிலர்க்கு நிலமாவது’
என்றது முடிய,
‘இவருடைய மகிழ்ச்சிக்கு எல்லையின்று’ என்பதனைத் தெரிவிக்கிறார்.
ஹர்ஷப்பிரஹர்ஷம்
- மகிழ்ச்சியின் மிகுதி.
2. ‘அறிவது’ என்றதன்
பின்னர், ‘இவ்வாழ்வாராகிறார் பகவத் விஷயத்தில்
லாபாலாபங்களில் பிறக்கும் சோகமும் மகிழ்ச்சியும்
ஒழிய, மற்றொன்றும்
அறியாதே ‘நின்னலால் இலேன்காண்’ என்னும்படியான ஆராத
காதலையுடையராகையாலே
இவர்க்கு இங்ஙனம் இருக்கக்கூடும்,’ என்பதனைச்
சேர்த்து வாக்கியப்பொருளை முடிக்க.
|