பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
144

எங

எங்ஙனே?’ எனின், ‘இவருடைய சோகமும் மகிழ்ச்சியும் சாஸ்திரங்களிலே விலக்கிய சோகமும் மகிழ்ச்சியும் அல்ல; சமஸ்த கல்யாணகுணாத்மகனான சர்வேசுவரனை அனுபவித்து அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியாயிற்று இவர்க்கு மகிழ்ச்சியாவது. ‘இப்படி வகுத்த சர்வேசுவரனை அநாதிகாலம் இழந்து இதர விஷயத்தில் ஈடுபாடு உடையோமாய்க் கேட்டினை அடைவோமே!’ என்னுமதாயிற்று இவர்க்குச் சோகமாவது. மேலும் 1‘காமம் ஆகாது’ என்று விலக்கியிருக்கவும், 2‘இடைவிடாது தியானம் செய்யத் தக்கவன்’ என்று கொண்டு பகவத் காமத்தைச் சாஸ்திரங்கள் விதியாநின்றனவே அன்றோ? இனி, 3முத்தரும் பகவானுடைய அனுபவத்திலே 4‘நான் பரமாத்துமாவுக்கு இனியவனாய் இருக்கிறேன்; நான் பரமாத்துமாவாகிற

____________________________________________________

1. ‘பகவானைப் பற்றி வந்தவையானாலும், சோகமும் மகிழ்ச்சியும்
  தியாச்சியமன்றோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘காமம் ஆகாது’ என்றது முதல் ‘சாஸ்திரங்கள்
  விதியாநின்றனவேயன்றோ?’ என்றது முடிய. இதனால், ‘’காமம் ஆகாது’
  என்று விலக்கியிருந்தும், பகவத்காமம் உத்தேஸ்யமாயினது போன்று, இதர
  விஷயங்களைப் பற்றி வரும் சோகமும் மகிழ்ச்சியும் தியாச்சியமானாலும்
  பகவத் விஷயத்தைப் பற்றி வரும் சோகமும் மகிழ்ச்சியும் உத்தேஸ்யமாம்’
  என்றபடி. இவ்விடத்தில், ‘களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பன
  அன்றோ சமயத்தோரானும் உலகத்தோரானும் கடியப்பட்டன? அவற்றுள்
  ஒன்றாலோ இது?’ எனின், அற்றன்று; களவு என்னும் சொற்கேட்டுக் களவு
  தீது என்பதூஉம் காமம் என்னும் சொற்கேட்டுக் காமம் தீது என்பதூஉம்
  அன்று; மற்றவை நல்லவாமாறும் உண்டு; ‘சுவர்க்கத்தின்கண் சென்று போகம்
  துய்ப்பல்’ என்றும், ‘உத்தர குருவின்கண் சென்று போகம் துய்ப்பல்’ என்றும்,
  ‘நள் ஞானம் கற்று வீடு பெறுவல்’ என்றும், ‘தெய்வத்தை வழிபடுவல்’
  என்றும் எழுந்த காமம் கண்டாயன்றே? மேன்மக்களாலும் புகழப்பட்டு
  மறுமைக்கும் உறுதி பயக்குமாதலின், இக்காமம் பெரிதும் உறுதியுடைத்து
  என்பது,’ என்ற இறையனார் களவியலுரை (பாயிரம்) கருதத் தக்கது.

      திருவாய்மொழி முதற்பத்து ஈட்டின் தமிழாக்கம், பக். 122 பார்க்க.

2. பிரு. உப. 4 : 5.

3. பகவானைப் பற்றி வருகின்ற காமம் அல்லது மகிழ்ச்சி தியாச்சியமன்று;
  உத்தேஸ்யமே’ என்பதற்கு, ஐந்து வகையாக அநுஷ்டானங்கள் காட்டுகிறார்,
  ‘முத்தரும்’ என்று தொடங்கி, ‘ராஜபுத்திரர்கள் முதுகோடே போமாயிற்று’
  என்றது முடிய.

4. தைத்திரீய உபநி. பிருகு. 10.