|
இன
இனிய பொருளை அனுபவிக்கிறவன்,’
என்று களியாநிற்பர்கள் அன்றோ? 1‘இறந்தகாலம் எதிர்காலம் இவற்றில் நடந்த
நடக்கும் காரியங்களைச் சொல்லுகிறவராயும், ஒன்றிலும் ஐயம் இல்லாதவராயும், எல்லாத் தர்மங்களையும்
அறிந்தவராயுமுள்ள நாரதர்’ என்று சொல்லப்படுகிற நாரதர் முதலிய முனிவர்களும் பகவானுடைய சந்நிதியில்
வந்தவாறே ஆடுவது பாடுவது ஆகாநிற்பர்கள் அன்றோ? விரக்தரில் முதல்வனான திருவடியும் பிராட்டியைக்
கண்டுவந்த மகிழ்ச்சியினாலே முதலிகளைப் பார்த்து, 2‘நீங்கள் மதுவனத்தை அழித்து
உண்ணுங்கோள்! நான் உங்களுடைய விரோதிகளைத் தடுக்கிறேன்!’ (விரோதிகளாவார், காத்திருந்த
ததிமுகன் முதலியோர்) என்றானன்றோ? மஹாராஜர்க்கு, ‘உம்முடைய காவற்காடு அழிந்தது’ என்று அறிவிக்க,
‘நம்மோடு கூறிப்போந்த காலமுந்தப்பி, நாந்தாம் ‘தீக்ஷ்ண தண்டர்’ என்று அறிந்திருந்தும்,
இவர்கள் காவற்காட்டை அழிக்கும் போது, 3‘செய்ய
_______________________________________________
1.
பாரதம், ராஜசூ. 21.
2.
ஸ்ரீராமா. சுந்.
‘நீங்கள் மது வனத்தை அழித்து
உண்ணுங்கோள்’ என்ற
இவ்வரலாற்றைக் கம்பராமாயணம், சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்,
12 முதல் 25 முடியவுள்ள செய்யுள்களில் காணலாகும். ‘மகாராஜருக்கு’
என்றது முதல் ‘சென்று அறைந்ததாயிற்று’
என்றது முடிய உள்ள
சரிதப்பகுதியை மேற்படி படலம் 35 முதல் 42 முடிய உள்ள
செய்யுள்களிற்காணலாகும்.
தீக்ஷ்ண தண்டர் - கடுமையான தண்டனையைச்
செய்கிறவர்.
3.
ஸ்ரீராமா.
சுந். 63 : 15. இவ்விடத்தில்,
‘ஏம்பலோ
டெழுந்துநின் றிரவி கான்முளை
பாம்பணை அமலனை வணங்கிப்
பைந்தொடி
மேம்படு கற்பின
ளென்னும் மெய்ம்மையைத்
தாம்புகன் றிட்டதிச்
சலமென் றோதினான்.
‘பண்டரு
கிளவியாள் தன்னைப் பாங்குறக்
கண்டன ரன்னதோர்
களிப்பி னாலவர்
வண்டுறை மதுவன
மழித்து மாந்தியது
அண்டர்நா
யக!இனி அவலம் தீர்கெனா.’
என்ற செய்யுள்களை ஒப்பு
நோக்கலாகும். மேலும், ‘ஏம்பலோடெழுந்து’
என்ற பகுதியில், அப்போதுண்டான மகிழ்ச்சி இருந்த
இடத்தில் இருக்க
வொட்டாமல் வாலானது ருஸ்யமுக பர்வதத்தின் கொடுமுடியிலே சென்று
அறைந்ததாயிற்று,’
என்ற வியாக்கியானத்தின் கருத்துத் தொனித்தல்
காணலாகும்.
|