வ
வியாக்கியானத்தில்
வந்துள்ள ஐதிஹ்யங்கள்
சிற்றாட்கொண்டான்
என்பார் ‘மறையாதே’ என்பதற்கு ‘மறையும் மறையும்’ என்று அருளிச்செய்வர்.
(ப. 25)
ஆழ்வார் திருவரங்கப்
பெருமாள் அரையர் இத்திருவாய் மொழி பாடப்புக்கால் ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம்,
காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல் அவ்வளவிலே
தலைக்கட்டிப் போவாராம்.
(ப. 70)
‘இது ஆளவந்தார்
அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்ல மாட்டேன்’ என்பராம் அனந்தாழ்வான்.
(ப. 83)
பண்டு தலை மயிர்
இல்லாதான் ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல்
நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்?’ என்ன, ‘ஒன்றும் இன்று; கண்டு
போக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட,
அவன் அதனைக் கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன,
‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன, ‘அவன் சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு,
‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும்
வைது போவதே! என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து, ‘ஏன்தான்! குழல்கள் அலைய
அலைய ஓடி வாரா நின்றீர்!’ என்ன, ‘ஒன்றும் இன்று;’ இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச்
சொல்ல வந்தேன்,’ என்றானாம் என்பர் பட்டர்.
(ப. 93)
நம் முதலிகளுள்
ஒருவரை ஒருவன், ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்ல வேணும்’ என்ன, ‘நான் உனக்கு அது
|