|
செ
சொல்லுகிறேன்; நீ
எனக்கு அவனை மறக்க ஒரு விரகு சொல்லவல்லையே?’ என்றாராம்.
(ப. 121)
பட்டர், இவ்விடத்தை
அருளிச்செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து, ‘அவன் நூறாயிரம் செய்தாலும்
விக்ருதராகாதிருக்கும்போதும் நாமே வேணும்; நமக்கு ஓர் ஆபத்து உண்டானால் இருந்த இடத்தில்
இருக்கமாட்டாமல் விக்ருதராம்போதும் அவனே வேணும்’ என்று அருளிச்செய்தார்.
(ப. 153)
‘திருப்புன்னைக்கீழ்
ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப் பேர் கூட நெருக்கிக்கொண்டு இருக்கச்செய்தே,
கிராமணிகள், மயிர் எழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே
புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப்பிள்ளை அருளிச்செய்வர்.
(ப. 165)
ஆயிரத்தளியிலே
ராஜா இருக்கச்செய்தே, பெரியநம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து
கிடக்கச் செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைப்
பிரதிபத்தி பண்ணக்கடவோம்’ என்று திரிகிறார் சிலர், அங்கே வந்து ஆழ்வானைக் கண்டு,
‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லி அறியாதவன், ‘வாரிகோள் மாணிகாள்!
வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்தி பண்ண இருக்கின்றீர்களோ நீங்கள்?
ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சித்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாய்
இருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.
(பக். 178)
மி்ளகாழ்வான்
வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல, ‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன, ‘அது
என்? வேத பரீட்சை வேணுமாகில் அத்தைச் செய்வது; சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில் அத்தைப்
பரீட்சிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போரும்; அதற்கு உம்மைச் சொல்ல ஒண்ணாது,’ என்ன,
‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, ‘நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலேகாண்,’ என்ன,
புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கை
|