|
வ
விட்டதற்கு; ஆதலால்,
வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால், ‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே
வேண்டுவது.
(ப. 108,
168)
‘இரணியன் பக்கல்
சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச்
சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’
என்று அருளிச்செய்தார்.
(ப. 209)
இவ்விடத்தைப்
பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடமெங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு
இது பணியே அன்றோ?’ என்ன, ‘இவர் மற்றோர் இடத்திலே தலை நீட்டுவது பாவனத்தைப் பற்ற; இவர்
தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே’ என்று அருளிச்செய்தார்.
(ப. 216)
பட்டர் இராமாவதாரத்தில்
பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான் ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும்
அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய
நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு?’ என்ன, ‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்;
இக்ஷ்வாகு வம்ஸயரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச்செய்தார்.
(ப. 216)
எம்பெருமானார் திருவாராதானம்
பண்ணிப்போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையன்றோ? இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய், அவரைப் பார்த்து,
‘இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவை இடாதார் எழுந்தருளினார்’ என்றாராம்.
(ப. 217)
‘ஒரு சிறாயை நம்பி
ஆறு மாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்; அதைப்
போன்ற விஸ்வாசமாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச்செய்வர்
எம்பெருமானார்.
(ப. 217)
|