|
பட
பட்டர் திருக்கோட்டியூரிலே
எழுந்தருளி இருக்கும்போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேஸ்வரன் நாற்றோளனாயோ,
இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயனர் ‘துவிபுஜன்’ என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள்
‘சதுர்புஜன்’ என்னாநின்றார்கள்,’ என்ன, ‘இரண்டிலும் வழி ஏது?’ என்ன, ‘துவிபுஜனாய் இருந்தானாகில்
பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது; சதுர்புஜன் என்று தோன்ிற்றாகில் பெருமாளைப் போலே
இருக்கிறது’ என்று அருளிச்செய்தார்.
(ப. 247)
நிலாத்துக்குறிப்
பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் சதுர்புஜனாயிருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம்
உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே உள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம்
கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன, வேறு பதில்
சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராயிருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது. பொறுத்தலாகாதோ?’
என்று அருளிச்செய்தார்.
(ப. 248)
பிள்ளையாத்தான்
என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து, ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி
அருளிச்செய்யவேணும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டாலாயிற்று;
அங்கே கேள்,’ என்ன, ‘அவரைத் தண்டன் இடவேணுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேணுமாகில் செய்கிறாய்’
என்று என்னை அழைத்து ‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்’ என்ன, இவ்வளவும்
வரக் கேட்டவாறே, என்னை மிகவும் அநுவர்த்திக்கப் புக, நான் ஒட்டாதொழிய, சீயர்பாடே சென்று
‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் இங்கு வணங்குவதற்கு
இசையும்படி செய்ய வேணும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து அநுவர்த்தித்தான் என்று
அருளிச் செய்வர் நம்பிள்ளை.
(ப. 252)
வீரப்பிள்ளையும்,
பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்திலே ஏகாந்தராய், தங்களிலே செறிந்து
போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்புண்டாய்த் தங்களிலே வார்த்தை
சொல்லாதே இருக்க, இவர்களைப் பார்த்துப்
|