பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
400

New Page 1

‘பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியமல்லாமையோ, பகவத்விஷயம் அராட்டுப் பிராட்டாயோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனும் ஸ்ரீ வைஷ்ணவனும் வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப் போனார்கள்.

(ப. 253)

    ‘இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில் ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்கள் ஆகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

(ப. 274)

    ‘ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிகளாழ்வானைக் கேட்க, ‘ஸ்மாராக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்குமன்றோ? என்று அருளிச்செய்தாராம்.

 (ப. 279)

    ‘ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன; ஐக்கியம் சொல்லுகிற இடம் எல்லாம் பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று பிராசங்கிகமாக ஓர் உருவிலே அருளிச்செய்தார்.

(ப. 307)

    கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் ‘திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட, அவன்பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டுச் சம்பாவியும்’ என்று அருளிச்செய்ய, அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம் படியே!’ என்ன, ‘ஆஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே? கிராம கார்யம்செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்.

(ப. 326)