|
ஆன
ஆனாராகில் இவர்க்குப்
பாவமாவது என்?’ என்னில், அப்படி, தம்முடைய இருப்புக்குத் தாரகமாய் உள்ள சர்வேசுவரனை இப்போது
விரும்பியவாறே அனுபவிக்கப் பெறாமையாலே இழக்கைக்குக் காரணம் பாபமே அன்றோ?
1‘மமைவ
துஷ்க்ருதம் கிஞ்சித் - ‘என்னுடைய தீய செயலே’ என்றாளே அன்றோ பிராட்டியும்? ‘என்றது, என்
சொல்லியவாறோ?’ எனின், ‘பகைவர்கள் கூட்டத்தை அடியோடு அழித்து என்னைக் காப்பதற்குத் தகுதியான
ஆற்றலையுடையவர்களாவது, இதற்கு முன்னரெல்லாம் பகைவர்கள் மண்ணுண்ண வளர்ந்து போந்தவர்களாவது,
நான்தான் தங்களை அழிய மாறியும் பாதுகாக்க வேண்டும்படி துன்பத்தையுடையவளாயிருப்பது; இப்படியிருக்க,
அவர்கள் என்னைப் பார்த்துத் திருவருள் புரியாதிருந்தார்கள்; இதற்குக் காரணம், அவர்கள் பக்கலிலேயாதல்
என் பக்கலிலேயாதல் ஆக வேண்டுமேயன்றோ? ஆயின், அவர்கள் பக்கல் ஒரு கண்ணழிவு சொல்லலாய்
இருந்ததில்லை; இனி, என்னுடைய பாபமேயாமித்தனை,’ என்கிறாள் என்றபடி. ‘நாம்தாம் எல்லாம்
அறிகைக்கு முற்றறிவினர்கள் அல்லாமே!’ அறியாதிருப்பது யாதேனும் ஒன்று உண்டாக வேண்டுமே!’ என்பாள்,
‘கிஞ்சித்’ என்கிறாள். 2காரியத்தைக் கொண்டு காரணம் கற்பிக்கப்படுவது உண்டேயன்றோ?
ஞாலம் உண்டாய் -
3‘தங்களுடைய முயற்சியாலே பேறு’ என்று இருப்பவர்கள், பாவங்களின் மிகுதியை
_________________________________________________
1. ‘விரும்பியவாறே அனுபவிப்பியாமை
அவன் குற்றமாயிருக்க, இப்படித் தம்
குற்றமாக நினைத்த பேர் உளரோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘மமைவ’ என்று தொடங்கி. இது, இராமா. சுந். 38 :
48; திருவடியைப்
பார்த்துப் பிராட்டி கூறியது. மேற்படி சுலோகத்தில்
வந்துள்ள ‘கிஞ்சித்’ என்பதற்கு, ‘ஒன்று’
என்று பொருள் கூறத் திருவுள்ளம்
பற்றி, ‘ஒன்று என்கிறது என்?’ என்ற சங்கையிலே அருளிச்செய்கிறார்,
‘நாம்தாம்’ என்று தொடங்கி.
2. ‘ஒன்று உண்டு என்று அறிந்தபடி
எப்படி?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘காரியத்தைக்கொண்டு’ என்று தொடங்கி.
‘ஒன்றாகிலும்
சிறியதாகில் அதனைப் பரிஹரித்துக்கொள்ளலாகாதோ?’ என்ன, ‘மஹத் -
பெரியது’;
அதாவது, ‘அவனுடைய கிருபையையும் தப்புவிக்கத்
தக்கதாயிருப்பதொன்றுண்டு,’ என்று பிராட்டி
அருளிச் செய்தாற்போலே,
இவரும், ‘இழக்கைக்குக் காரணம் என் பாபமேயன்றோ?’ என்கிறார் என்று
மேலே கூட்டிக்கொள்க.
3. ‘பாபம் அதிகமானால்,
பிராயஸ்சித்தம் செய்தாலோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘தங்கள் தங்களுடைய’
என்று தொடங்கி. ‘என்றது, என்
சொல்லியவாறோ?’ எனின், ‘இவர்தாம் பிரபந்நராகையாலே, அவன்
கைபார்த்திருக்குமவராகையாலே, பிராயஸ்சித்தம் செய்யமாட்டார்,’ என்றபடி.
|