|
அன
அன்றிக்கே,
1‘பிரளயத்தால் கொள்ளப்பட்ட பூமி, தன்னைத்தானே எடுக்க முயற்சி செய்யும் அன்றேயன்றோ
தாங்கள் தாங்கள் செய்த கர்மங்களைத் தாங்கள் போக்கிக் கொள்ளத் தகுதியுள்ளது? சம்பந்தமும்
ஆபத்தையுடைய வராகையும் அன்றோ உனக்குக் காப்பாற்றுவதற்கு வேண்டுவது?’ என்கிறார் என்னுதல்.
‘நாம் உதவி செய்யும்
தன்மையோம் ஆனாலும், பேறு 2இத்தலையாலேயான பின்பு, பேற்றுக்குத் தகுதியான ஞானம்
வேண்டுங்காணும் உதவும் போது!’ என்ன, ஞானமூர்த்தி - நிதானம் அறிந்து பாவங்களைப் போக்குவதற்குத்
தகுதியான ஞானத்தையே சொரூபமாக உடையவனே! ‘என்றது என் சொல்லியவாறோ?’ எனின், 3‘ஆமாறு
ஒன்று அறியேன் நான்’, 4‘ஆமாறு அறியும் பிரானே’ என்கிறபடியே, ‘என்னை அறிவு கேடன்
ஆக்கிக்கொள்ளுகைக்குத் தகுதியான ஞானம் அன்றோ என் கையில் உள்ளது? இதனைக் கழித்து என்னையும்
நல்வழி போக்கும் ஞானம் உள்ளது உன் கையிலே அன்றோ?’ என்கிறார் என்றபடி. மேலும், 5‘தேவரீரால்
அறியப்படாத பொருள் ஒன்றும் இல்லை,’ என்கிறபடியே, நான் அறிவது ஒன்றும் இல்லை; நீ அறியாதது
ஒன்றும் இல்லை; நான் செய்ய வல்லது ஒன்றும் இல்லை; நீ செய்யமாட்டாதது ஒன்றும் இல்லை. யார்
காரியம் யாருக்குப் பரம்? 6ஒருவனுக்குக் கண் தோற்றாதே காலும் நடை தாராதே இருந்தது;
ஒருவனுக்குக் கண்ணும் தோற்றிக் காலும் நடை தருவதுமாய் இருந்ததானால். யார்க்கு யார் வழி காட்டிப்
போவார்?’ என்கிறார் என்றபடி.
‘ஆபத்துக்கு உதவிசெய்பவனுமாய்,
அறிந்து போக்குதற்குத் தகுதியான ஞானமும் உண்டானாலும் சம்பந்தம்
_____________________________________________________
1. ‘நாராயணா’ என்ற பதத்திலே நோக்காக, பாவம் அருளிச்செய்கிறார்,
‘பிரளயத்தால்’ என்று தொடங்கி. ஆக, ‘ஞாலமுண்டாய்’ என்பதற்கு மூன்று
வகையான கருத்து அருளிச்செய்தபடி.
2. இத்தலையாலே - நம்மாலே;
‘ஈசுவரனாலே’ என்றபடி.
3. திருவாய். 4.
9 : 2.
4. பெரியாழ்வார் திரு.
2. 7 : 8.
5. ஜிதந்தா.
6.
‘ஞானமுள்ளவன், ஞானமில்லாதவனுக்குக் காரியம் செய்ய வேண்டுமோ?’
என்ன, ‘ஒருவனுக்கு’ என்று தொடங்கி
விடை அருளிச்செய்கிறார்.
|