|
உள
உள்ள விஷயங்களிலே அன்றோ
உதவுவது?’ என்ன, நாராயணா - ‘இப்படிக் காப்பதற்குச் சம்பந்தம் உள்ளவனே!’ என்கிறார்.
1இதுதான் சரீரமாய் இருப்பதனால் அடிமையாக இருக்கிறது என்றே அன்றோ இத்தால்
சொல்லுகிறது? 2 ஆனால், கேவலம் சரீரமோ, சரீரியைப் பெறுகைக்கு முயற்சி செய்வது?
3என்று என்று - உபாயத்திற்கு உறுப்பான வாத்சல்யம் முதலிய குணங்களும், உபேயத்திற்கு
உறுப்பான இறைவனாம் தன்மை முதலிய குணங்களும் நாராயண பதத்துக்கு அர்த்தமாகையாலே அவ்விரண்டனையும்
பற்ற ‘என்று என்று’ என்கிறார். இனி, இவர்தாம் ஒரு பிரயோஜனத்திற்காக ஒருகால்
சொல்லி, ‘அது கைபுகுந்தது’ என்று ஆறியிருக்குமவர் அல்லரே! 4நம் உபாயத்தில் வர்த்தமானம்
போலே இதுதான் பிரயோஜனமாய் இருக்குமே இவர்க்கும்! ஆதலின், ‘என்று என்று’ என்கிறார்
என்னுதல். ‘நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை’ அன்றோ இதுதான்?
_____________________________________________________
1. ‘‘நாராயணன்’ என்றால்,
சம்பந்தத்தைச் சொல்லுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இதுதான்’ என்று தொடங்கி.
இத்தால் - நாராயண
சப்தத்தால்.
2. ‘இத்தால் பலித்தது
யாது?’ என்ன, ‘ஆனால்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். இது, நாராயண சப்தத்தை
அன்மொழித்தொகையாகக் கொண்டு கூறும் பொருள்; ‘உடையவன் அன்றோ
உடைமை பெறுகைக்கு முயற்சி செய்வான்?’
என்பது, அதனை வேற்றுமைத்
தொகையாகக் கொண்டு கூறும் பொருள். ஆக, அன்மொழித்தொகையாகக்
கொண்டு கூறும் பொருளில் சரீர சரீரி பாவ சம்பந்தமும்,
வேற்றுமைத்தொகையாகக் கொண்டு கூறும்
பொருளில் ஸ்வஸ்வாமி பாவ
சம்பந்தமும் பொருளாகக் கொள்க.
3. ‘என்று என்று’ என்ற
அடுக்குத்தொடருக்குக் கூறப்படும் பொருள்
இரண்டனுள், பின்னையது இனிமையிலே நோக்கு. ஆறி இருக்குமவரல்லரே?
ஆகையாலே, ‘போக்யதையாலே பலகாலும் சொல்லுகிறார்’ என்றபடி.
4.
‘ஆறியிராமைக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘நம் உபாயத்தில்’
என்று தொடங்கி. ‘என்றது, என்
சொல்லியவாறோ?’ எனின், ‘நம் உபாய வாசகமான துவயம் என்னும்
மந்திரத்தில் ‘பிரபத்யே - பற்றுகிறேன்’ என்கிற வர்த்தமானம்போலே,
இதுதான் பிரயோஜனமாயிருக்குமே
இவர்க்கு’ என்றபடி. வர்த்தமானத்திற்கு
நிகழ்காலம் முதலிய பல பொருள் உண்டானாலும், இவ்விடத்தில்
இனிமையிலேயே நோக்கு. இனிமையாய் இருக்கும் என்பதற்குப் பிரமாணம்,
‘நமோ நாராயணா’ என்ற திருப்பாசுரம்.
இது, முதல் திருவந்தாதி, 95.
இத்திருப்பாசுரத்தில், ‘ஓவாதுரைக்கும்’ என்றதற்கு இரண்டு
கருத்து: அதாவது,
‘ஸஹஸ்ராக்ஷரீ மந்திர ஜபம்போலன்றிக்கே மூச்சு விடாமல் சுலபமாக
அநுசந்திக்கலாயிருக்கும்’
என்னுதல். ‘இனிமையாலே நித்தியமாக
அநுசந்திக்கப்படும்’ என்னுதல்; இதுவே இங்கு வேண்டுவது.
|