பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
383

1

    1‘சாத்துவிக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’ என்னில், 2புராண கர்த்தாக்கள் எல்லாரும் பிரமன் பக்கலிலே சென்று இவ்விரண்டு காதைகளைக் கேட்டுப் போந்து தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்; 3அந்தப் பிரமனும் 4‘ஸ்ரீமந் நாராயணர் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்; அந்த நாராயணர் அந்தப் பிரமனுக்கு வேதங்களையும் உபதேசித்தார்,’ என்கிறபடியே, சர்வேசுவரனாலே படைக்கப்பட்டவனாய் அவனாலே ஞானத்தையடைந்தவனுமாய் இருக்கச் செய்தேயும், 5‘முனி புங்கவர்களான தக்ஷர் முதலானவர்களாலே கேட்கப்பட்டவரும்

_____________________________________________________

1. ‘‘சாத்துவிக புராணங்கள்’ என்று விசேடித்துக் கூறுவதற்குக் கருத்து என்?’
  என்னில், என்றதற்குக் கருத்து, ‘புராணங்களுக்கு முக்குண பேதங்கள்,
  சத்துவம் முதலான குணங்களையுடைய வர்களாய்க்கொண்டு அவற்றைச்
  சொன்னவர்கள் காரணமாகவேயன்றோ வந்தன? எல்லாப் புராணங்களையும்
  கூறியவன் பிரமன் ஒருவனுமேயாய் இருக்க, இங்ஙனம் விசேடிக்க
  வேண்டுமோ?’ என்பது.

2. ‘புராணங்கள் எல்லாம் பிரமனாலே கூறப்பட்டனவாகில் ஸ்ரீ விஷ்ணு
  புராணம் முதலான புராணங்களுக்குப் பராசரர் தொடக்கமான
  மஹருஷிகளைக் கர்த்தாக்களாகச் சொல்லக்கூடாதே?’ என்ற வினாவைத்
  திருவுள்ளம் பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘புராணகர்த்தாக்கள்’
  என்று தொடங்கி. ‘இவ்விரண்டு காதைகளை’ என்றது, ‘இரண்டு மூன்று
  வார்த்தைகளை’ என்றபடி. ‘தாங்கள் தாங்கள் புராணங்கள் செய்தார்கள்’
  என்றது, ‘ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு குணம் மேலோங்கி நிற்கும்
  பிரமனுக்கு; அந்தப் பிரமனும், அந்த அந்தக் குணத்திற்குத் தகுதியாகக்
  கூறுவான்; அவன் கூறியதற்குத் தகுதியாக மஹருஷிகளும் புராணங்கள்
  செய்தார்கள்,’ என்றபடி.

3. ‘பகவானால் படைக்கப்பட்டவனாய், அவனாலேயே ஞானத்தை
  அடைந்தவனான பிரமனுக்கும் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும்
  தன்மை உண்டோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அந்தப்
  பிரமனும்’ என்று தொடங்கி.

4. ஸ்வேதாஸ்வதரம்.

5. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 2 : 10.