New Page 1
செய்கிறோம்’ என்றும்
பிள்ளையின் திருமாளிகையிலே வந்து, சாந்து, புழுகு, ஆபரணம் முதலானவைகளை வாங்கிக் கொண்டு
போய் அவற்றை அலங்கரித்துச் சாந்தியும் செய்துவிட்டு வந்த அந்த இரவு, பண்டையிலும் இரு மடங்கு
அதிகமாக அவனை வலிக்க, ‘இது என்?’ என்று கேட்க, ‘பிள்ளை சார்த்திக்கொள்ளுகின்றவற்றையெல்லாம்
கொண்டு வந்தீர்கோள்; அவர்க்குச் சார்த்துகிற அணுக்கனை இட்டீர்கோள்; நான் அதன்கீழ்ப்
போவேனோ? என்னை வெயிலிலே கொண்டு போனீர்கோள்; என் உடம்பிலே நெருப்பை வழியட்டினாற்போலே
அவர் சார்த்துகிறவற்றைப் பூசினீர்கோள்; அரிகண்டம் இட்டாற்போலே அவர் சார்த்துகிற
ஆபரணத்தைப் பூட்டினீர்கோள்; நீங்கள் செய்த செயலுக்கு இவனைக்கொண்டல்லது போகேன்,’ என்று
வலித்ததாம்.
(பக்.215)
ஆய்ச்சி மகனுடைய
அந்திம காலத்தில் பட்டர் ‘அறிய’ என்று எழுந்தருளியிருந்தாராய், தம்மை அறியாமலே கலங்கிக்
கிடக்கிறபடியைக் கண்டு, பெருமாளிடத்தில் இவருடைய பத்தி இருந்தமையைத் தாம் அறிந்திருக்கையாலே,
மெள்ளச் செவியில் ஊதினாற்போலே, ‘அழகிய மணவாளப் பெருமாளே சரணம்!’ என்றாராம்; பின்னர்,
அதிலே உணர்த்தியுண்டாய் நெடும்போதெல்லாம், ‘அழகிய மணவாளப்பெருமாளே சரணம்!’ என்று கூறிக்
கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினாராம்.
(பக். 217)
வண்டரும் சொண்டரும்
என்கிறவர்களுக்கு அரையன் சொன்ன வார்த்தைக்குப் பிள்ளையுறங்காவில்லிதாசர் பரிஹாரம் செய்தபடியை
இங்கே நினைப்பது. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், அகளங்க நாட்டாழ்வான் இவர்களுக்கு
அமணன் பாழியிலே சிங்கத்தைக் காட்டித் ‘திருமுற்றம்; திருவடி தொழுங்கோள்,’ என்ன, அவர்களும்
மெய் என்று திருவடி தொழுது, அது அமணன் பாழி என்று அறிந்தவாறே மோஹித்து விழ, பிள்ளையுறங்காவில்லிதாசர்
தம் ஸ்ரீ பாததூளியை அவர்களுக்கு இட, உணர்ந்து எழுந்திருந்த உண்மை வரலாற்றினை உணர்த்தியபடி.
(பக்.
231)
திருக்கொட்டாரத்தின்
அருகே கைந்நிரை கட்டிக் கொண்டிருக்கிற நாளிலே, சீயர் இத்திருவாய்மொழி அருளிச்செய்கிறாராய்
இப்பாசுரத்தளவிலே வந்தவாறே,
|