பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
454

New Page 1

‘தேர்ப்பாகனார்க்கு என்று நோய்க்கு நிதானம் சொன்னாளாகில், அத்தேர்ப்பாகனை இட்டு நீக்கிக்கொள்ளாமல், ‘மாயன் தமர் அடி நீறு கொண்டு அணிய முயலின்’ என்று இதனைப் பரிஹாரமாகச் சொல்லுவான் என்? நோய்க்கு நிதானம் ஒன்றும் பரிஹாரம் ஒன்றுமேயாயோ இருப்பது?’ என்று நான் கேட்டேன்; ‘மோர்க்குழம்பு இழியாதே மோஹித்துக் கிடந்த சமயத்தில் சுக்கு இட்டு ஊதிப் பின்பு மோர்க்குழம்பு கொடுத்துப் பரிஹரிப்பாரைப் போலே, ‘தேர்ப்பாகனார்க்கு’ என்ற போதே அவரைக் கொடுவந்து காட்டப் பெறாமையாலே, முற்பட இவ்வழியாலே தேற்றிப் பின்னை அவரைக் கொடுவந்து காட்டுவதாகக் காணும்,’ என்று அருளிச்செய்தார்.

(பக். 231)

    ‘ஆழ்வான் பணித்த வரதராஜஸ்தவத்திலே ஒரு சுலோகத்தைக் கேட்டு, எம்பெருமானார், ‘இப்பாசுரங்கேட்டால் பெருமாள் இரங்காமை இல்லை; ஆழ்வான்! உன் முகத்தைக்காட்டிக்காணாய்,’ என்று பார்த்தருளினார்.

(பக். 273)

    நஞ்சீயர் இவ்விடத்தில் அருளிச்செய்வதொரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே அன்று அப்படியே இத்தை விரும்பினவன், இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்,’ என்று அவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள் என்பது.

(பக். 299)

    ஆழ்வான், தான் ஓரிடத்திலே வழியிலே போகாநிற்க, ஒரு பாம்பினாலே பிடிக்கப்பட்ட தவளையானது கூப்பிடா நிற்க, ‘இது யார் அறியக் கூப்பிடுகிறது?’ என்று மோகித்தாராம்.

(பக். 337)

    ‘ஒரு குருவி பிணைத்த பிணை, ஒருவரால் அவிழ்க்க ஒண்ணுகிறதில்லை; ஒரு சர்வ சத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை அவனைக் காற்கட்டாதே, இவ்வெலியெலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக்கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.

(பக். 368)

    மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது; என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலேகாண்’