பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
456

New Page 1

‘அதுதான் இருக்கிறபடி அறிவோம்,’ என்ன, இருவரும், இவர் பக்கலிலே வந்து, ‘நீ என்? தேவர்களை மனிதர்கள் கண்டால் அவர்களிடம் சென்று வேண்டும் வரங்களும் வேண்டிக்கொள்ளக் கடவர்களாயிருப்பார்கள்; நீ நம்மைக் கண்ட இடத்தில் நீட்டின காலை முடக்குதல், சில உபசாரங்களைச் செய்தல், சிலவற்றை வேண்டிக்கோடல் செய்யாமல் இருந்தாயே!’ என்ன, ‘அழகிது! அவையெல்லாம் செய்யக் கடவன். மோக்ஷம் தரலாமோ?’ என்ன, ‘அது நம்மாலே செய்யலாமதன்று; பகவானிடத்தில் சரணாகதி செய்து அவன் திருவருளாலே பெறவேண்டும்,’ என்ன, ‘ஆகில், இன்று சாவாரை நாளை இறக்கும்படி பண்ணலாமோ?’ என்ன, ‘அதுவும் கர்மங்களுக்குத் தகுதியாக அன்றோ இருப்பது? நம்மால் செய்யப் போகாது,’ என்ன, ஆகில், நீ செய்யுமது, இந்த ஊசி போகும் வழியே நூலும் போகும்படி அனுக்கிரஹித்து நடக்குமித்தினை,’ என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற்கண்ணைக் காட்ட, இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார் என்ற சரிதம் இங்கு அநுசந்திக்கத்தகும்.

(பக். 432)

    யயாதி சரித்திரத்தைப் பட்டர் வாசித்துப் போந்திருக்கச் செய்தே, பிள்ளை விழுப்பரையரும் ஆப்பான் திருவழுந்தூர் அரையரும், ‘வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாக வெளிப்போந்த பிரபந்தங்களில் இது எந்த அர்த்தத்தை விரித்துப் பேசுகிறது?’ என்று கேட்க, ‘புன் சிறு தெய்வங்கள் தந்தாமை ஆஸ்ரயித்துப் பெற்றாலும் பிறர் பக்கல் ஓர் உயர்வு கண்டால் அது பொறுக்க மாட்டார்கள்,’ என்றும், சர்வேசுவரனே ‘பிறர் வாழ்வு நம் வாழ்வு’ என்று நினைத்திருப்பான்,’ என்றும் சொல்லி, ‘ஆன பின்பு, மற்றைத் தேவர்கள் வணங்கத் தக்கவர் அல்லர்; இவன் ஒருவனுமே வணங்கத் தக்கவன் என்னும் அர்த்தத்தைச் சொல்லுகிறது,’ என்று அருளிச்செய்தார்.

(பக். 434)

    ‘யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரை ஒருவர் எறிந்து முடிந்து போனார்கள்,’ என்று கேட்டவாறே, ‘கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமானவற்றைக் கொடு வந்து கொடுத்துச் செய்யாதன இல்லை! பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியேயாய் இருந்தது; ‘நாம் பகவானை வணங்குகிற வணக்கத்துக்கும் பலம் அங்ஙனே ஆகிறதோ!’