வ
வியாக்கியானத்தில்
வந்துள்ள உவமைகள்
‘பிராட்டியும் ஸ்ரீ
விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று’
(பக். 4)
‘வெந்து அற்ற வீட்டிலே
‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ!’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று’
(பக். 4)
‘சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் அநுகரித்தாற்போலே’
(பக். 5)
‘முந்திரிகை நிலம்
உடையவனைப்போலே’
(பக். 6)
‘கடலிலே இழிவாரைப்போலே’
(பக். 18)
‘மருத்துவர்கள்
பிழைத்தாரை எண்ணுமாறு போன்று’
(பக். 26)
‘உதிரம் குடித்து
வாய்விட்ட அட்டை போலே’
(பக். 29)
‘கண்ணையிட்டுக்
கண்ணைப் பார்த்தாற்போலே’
(பக்.37)
‘சாணகச்சாற்றைப்
போன்று’
(பக். 37)
‘இராம விரஹத்தில்
திருவயோத்தியையில் உள்ளார் கூப்பிட்டாற்போல’
(பக். 42)
‘ஸ்ரீ விபீஷணாழ்வான்
இராவணனுக்குச் சொன்ன ஹிதம், அவன் திருந்துவதற்குக் காரணமாகாமல், தான் பெருமாளைப் பற்றுதற்குக்
காரணம் ஆனாற்போலே’
(பக். 43)
‘ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்
இரணியனுக்குச் சொன்ன ஹிதம், அவன் நெஞ்சிலே படாமல், தனக்குப் பகவானிடத்தில் பத்தி மிகுதற்குக்
காரணம் ஆனாற்போலே’
(பக். 43)
‘மூன்று களையும் பறித்துச்
சங்காயமும் வாரின பயிர் நூறு கிளைகளாகப் பணைத்துப் பலிக்குமாறு போலே’
(பக். 44)
‘அவன் இளமைப்பருவத்தில்
பாதுகாப்பதில் குறிக்கோளாயிருப்பது போலே’
(பக். 48)
|