New Page 1
‘பிராமணன் பிச்சு ஏறினாலும்
ஓத்துச்சொல்லுமாறு போன்று’
(பக். 48,
136)
‘பெருக்காறு வற்றினாற்போலே’
(பக். 55)
‘ஜ்வர சந்நிபதிதரைப்போலே’
(பக்.56)
‘வில் முரித்தாலும் இக்ஷ்வாகு
வமிசத்தார்க்கு அல்லது பெண் கொடாத ஜனகனைப்போலே’
(பக். 58)
‘அவன் சக்கரவர்த்தி திருமகனாயிருக்கச்செய்தேயும் பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்விய திருமேனியையுடையவனாய்
இருப்பது போன்று’
(பக். 64)
‘மலையை எடுத்தாற்போலே’
(பக். 67)
‘அம்புலி அம்மானைப்
பிடித்துத் தரவேணும்’ என்று அழுத குழந்தைக்குத் தேங்காயைக் கொடுத்து அழுகையை ஆற்றுவாரைப்போலே’
(பக். 73)
‘வீரராய் இருப்பார் எதிரி
கையில் ஆயுதத்தை வெறுங்கையோடு சென்று வாங்குமாறு போலே’
(பக். 77)
‘சேரபாண்டியன் தம்பிரானைப்
போன்று’
(பக். 82)
‘பயிரைச் செய்து செய்த்தலையிலே
குடி கிடக்குமாறு போன்று’
(பக். 86)
‘இந்திரனுக்கு இராச்சியம்
கூறுபட்டாற்போலே’
(பக். 100)
‘கலியர் சோற்றின்மேல்
மனம் என்னுமாறு போலே’
(பக். 101)
‘ஒருவனைப் பிடிக்க நினைத்து,
அவன் பக்கல் உண்டான ஆசையாலே, ஊரை வளைவாரைப்போலே’
(பக். 102)
‘உண்டி உடல் காட்டும்
என்னுமாறு போலே’
(பக். 103)
‘கடல் கிளர்ந்தாற்போலே’
(பக். 105)
‘செல்வத்திலே பேராசையுள்ள,
ஒருவன், கிழிச்சீரையைக் கெடுத்தால், அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து அவிழ்த்துப்
பார்க்குமாறு போன்று’
(பக். 110)
|