New Page 1
‘பித்தத்தால் பீடிக்கப்பட்டவன்
சந்தனக் குழம்பினின்றும் கைவாங்க மாட்டாததைப் போன்று’
(பக். 114)
‘நமக்கு அவ்விடத்திலும்
இவ்விடம் அணித்தாயிருக்குமாறு போன்று’
(பக். 115)
‘பெருவெள்ளத்தில் புறவடி
நனையாமல் இருப்பாரைப் போன்று’
(பக். 117)
‘வீரக் கழலோடே பட்டுக்
கிடப்பாரைப் போலே’
(பக். 118)
‘தாய் தந்தையர்கள் சேர
இருக்க, அவர்கள் அண்மையிலே பசி எடுத்து வருந்தும் குழந்தைகளைப் போலே’
(பக். 119)
‘‘அம்மே!’ என்பாரைப்போலே’
(பக். 119)
‘மயில்கள் கார்காலத்திலே
மகிழ்ச்சியினாலே ஆரவாரித்து ஆடுவதைப் போலே’
(பக். 128)
‘பாம்போடு ஒரு கூரையிலே
பயின்றாற்போலே’
(பக். 131)
‘மைத்திரேயர் முதலிய
மகரிஷிகளைப் போலே’
(பக். 136)
‘பசுவின் அருகே கட்டி வைத்த
கன்று துள்ளுமாறு போலே’
(பக். 140)
‘குழந்தைகள் துவாரங்கண்ட
இடங்களில் கையை நீட்டுமாறு போன்று’
(பக். 58)
‘ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
பெருமாளைக் கைப்பிடித்து பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதது போன்று’
(பக். 163)
‘ஓர் இடத்திலே மேகம்
மழை பெய்யாநின்றால், அவ்விடம் குளிர்ந்திருக்குமாறு போலே’
(பக். 163)
‘பனை நிழல் போலே தம்மை
ஒருவரையும் நோக்கிக் கொள்ளுத’
(பக். 166)
‘கருமுகை மாலை என்னுமாறு
போன்று’
(பக். 169)
‘அருச்சுனனுக்குப் பொறுக்கப்
பொறுக்க அருளிச் செய்தாற்போன்று’
(பக். 173)
|