பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
461

New Page 1

    ‘புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே’

(பக். 176)

    ‘தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தீம்பு செய்த குழந்தை தாயின் காலிலே விழுமாறு போலே’

(பக். 183)

    ‘நாம் தொடங்கின காரியம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று’

(பக். 183)

    ‘மலரில் மணத்தை வகுத்தாற்போலே’

(பக். 184)

    ‘தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கல் இரங்குவது போன்று’

(பக். 187)

    ‘ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே’

(பக். 193)

    ‘கருமுகை மாலையைச் செவ்வி பெறுத்த என்று நெருப்பிலே இடுவாரைப் போலே’

(பக். 203)

    ‘இருடிகள் கோஷ்டியில் கலக்கம் அரிதாயிருக்குமாறு போலே’

(பக். 209)

    ‘நதீ மாத்ருகம் போலே பலத்தோடே கூடி இருக்கும்’

(பக். 218)

    ‘முழங்கால் தகர, மூக்கிலே ஈரச்சீரை கட்டுமாறு போலே’

(பக். 241)

    ‘நீரிலே புக்கு அழுந்தினாரை முகத்திலே நீரைத் தெளித்துப் பரிஹரிக்குமாறு போலே’

(பக். 244)

    ‘துக்கத்தாலே நிரம்பியது ஒரு கடல், கை எடுத்துக் கூப்பிட்டாற்போலே’

(பக். 251)

    ‘சேர்ந்து குளிர்ந்த தண்ணீரை விடாயர்க்கு எட்டாமல் வைப்பாரைப் போலே’

(பக். 260)

    ‘செவ்வாய்க்கிழமையை ‘மங்களவாரம்’ என்னுமாறு போன்று’

(பக். 263)

    ‘கிழிச்சீரையிலே தனம் கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே’

(பக். 274)