New Page 2
‘கலியர்,
‘கலவரிசிச்சோறு உண்ண வேணும்’ என்னுமாறு போன்று’
(பக். 281)
‘யசோதைப்பிராட்டி
கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக்கொண்டாற்போலே’
(பக். 285)
‘காணப் பெறாமையாலே
அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே’
(பக். 286)
‘கள்ளியை
‘மஹாவிருக்ஷம்’ என்பது போன்று’
(பக். 292)
‘மலரில் மணத்தையே
வடிவாக வகுத்தாற்போலே’
(பக். 296)
‘முத்தன் சமுசார
யாத்திரையை நினையாதாப்போலே’
(பக். 297)
‘தகட்டின் அழுத்தின
மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று’
(பக். 303)
‘சந்நியாசிகள்,
தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே, மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக்
கொண்டு திரிவதைப் போன்று
(பக். 306)
‘இராவணனைக்
கொன்ற பின்பு பிராட்டி நீராடி எழுந்தருளின போதை நிறம் போலே’
(பக். 307)
‘பாண்டியர்கள் மற்றையார்
கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும், அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றை இட்டுக்
கவி பாடுவது போன்று’
(பக். 312)
‘இரண்டாம்
பிரிவுக்கு அடியான வனவாச ஞானம் போலே’
(பக். 313)
‘கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே’
(பக். 316)
‘மரத்தினைப் பற்றியுள்ள
நெருப்புப் போலே’
(பக். 319)
‘காவற்காட்டில்
துஷ்ட மிருகங்களுக்கு ஊட்டி இட்டு வளர்க்குமாறு போலே’
(பக். 319)
|