New Page 1
‘செருப்பு வைத்துத்
திருவடி தொழச் செல்லுவாரைப் போலே’
(பக். 331)
‘கருவுற்ற மகளிர்
பிள்ளைக்குத் தகுதியாக உணவு உட்கொள்ளுமாறு போன்று’
(பக். 331)
‘வாளேறு காணத் தேளேறு
மாய்ந்தாற்போலே’
(பக். 334)
‘சருகிலை திரளுமாறு
போலே’
(பக். 350)
‘சோற்றை இட்டுப்
பணிகொள் என்னுமாறு போலே’
(பக். 352)
‘மொண்டெழு பானை
போலே’
(பக். 353)
‘உயிர்க்கழுவில்
இருக்குமவன், நீர் வேட்கை கொண்டு தண்ணீரும் குடித்துத் திருப்தனாய் இருக்குமாறு போன்று’
(பக்.
357)
‘சரீரத்துக்கு வந்தவற்றுக்குச்
சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று’
(பக். 362)
‘ஐந்திர ஜாலிகரைப்
போலே’
(பக். 364)
‘செதுகையும் மண்ணையும்
நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியவற்றைச் செய்யுமாறு போலே’
(பக். 371)
‘உழக்காலே அளக்குமாறு
போன்று’
(பக். 374)
‘திருவயோத்தியையில்
மண்பாடு தானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே’
(பக். 374)
‘ஒரு நிலத்திலே
ஒரு கூறு உவர்ந்து கிடக்க, மற்றைக் கூறு விளைவதும் அறுப்பதுமாய் இருக்குமாறு போலே’
(பக். 376)
‘உதங்கன் நிர்ப்பந்தித்தாற்போலே’
(பக். 377)
‘அடுப்பிடு கல்லைப்
போன்று’
(பக். 379)
‘தாய் சந்நிதி
ஒழியக் குழந்தை வளராதாப் போலே’
(பக். 395)
|