பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
493

    பாடி காப்பாரே களவு காணுமாறு போலே.

பக். 104.

    ஈன்றோரே  நஞ்சிட்டாற்போலே.

105.

    “இராவணன் வரவிட்ட ஆள்” என்று ஐயம் உற்று இருந்தவள், “பெருமாள்பக்கல் நின்றும் வந்தவன்” என்று அறிந்த பின்பு அவனைக் கொண்டாடினாற் போலே.

பக். 109.

    சிறியதைப் பெரியது நலியுமாறு போலே.

பக். 115.

    என்னுடைய ஆத்மாவும் என்னுடைமைகளும் நீ இட்ட வழக்கு என்பாரைப் போலே.

பக். 121.

    கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே.

பக். 133.

    வட்டிக்குமேல் வட்டி ஏறின கடன் போலே.

பக். 142.

    சடையினால் தூக்கிட்டுக் கொள்ளுதல் முதலியவைகளிலே ஒருப்பட்டவரைப்போன்று.

பக். 154.

    திருவடி செல்லுகிற கணத்திலே அரக்கியர்கள் முழுதும்
உறங்கினாற்போன்று.

பக். 156.

    கோரை சாய்ந்தாற்போன்று.

பக். 156.

    பிரளயம் கோத்தாற்போலே.

பக். 156.

     உதிக்கின்ற சூரியன் ஆனவன், உலகம் எல்லாவற்றிலுமுள்ள இருளைப் போக்குவதைப்போன்று.

பக். 158.

    கறுப்பு உடுத்து வருவாரைப் போன்று.

பக். 161.

    ‘சாத்தன், கூத்தன்’ என்பன போன்று சில பெயர்களையுடையவர்களாய், அவர்கள் தாங்கள் ஜீவிக்கப் புக்கவாறே சிறுபேர் தவிர்ந்து ‘சோழக்கோனார்’ ‘தொண்டைமானார்’ என்று பட்டப்பெயர் பெற்று வாழுமாறு போன்று.

பக். 164.

    தாபத்தாலே வருந்தினவன் விடாய்ப்பட்டுப் பந்தல் ஏறவரக்கொண்டு தண்ணீர்ச்சால் உருண்டு கிடந்தால் பிழையாதாமாறு போன்று.

பக். 167.

    ஒருநீர்ச் சாவியிலே ஒரு பாட்டம் மழை பெய்தாற் போலே.

பக். 175.

    ஆழ்வாருடைய திருநாமம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சத்தைக்குக் காரணமாக இருப்பது போன்று.

பக். 176.