பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
495


    ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.

பக். 214.

    பரந்த மின் ஓரிடத்திலே சுழித்தாற்போலே.

பக். 217.

    கல்பக தரு பணைத்தாற்போலே.

பக். 217, 364.

    கங்கையின் அலைகளின் நடுவே வசிப்பாரைப் போலே.

பக். 233.

    ஸ்ரீராமபிரான் தன்னுடைய திருமேனியின் ஒளியாலே தண்டகாரண்யத்தை விளங்கச் செய்தது போல.

பக். 237.

    ‘எந்தச் சீதாபிராட்டி முன்பு ஆகாயத்தில் வசிக்கின்ற பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ’ என்று சொல்லப்பட்ட பிராட்டியைப் போலே.

பக். 239.

    கிண்ணகத்தில் இழிவாரைப் போலே.

பக். 242.

    ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே.

பக். 246.

    கீதோபநிடத ஆசாரியனைப் போலே.

பக். 246.

    பருந்து இறாஞ்சினாற்போன்று.

பக். 252.

    ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே.

பக். 262.

    அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே.

பக். 263.

    முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே.

பக். 264.

    நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே.

பக். 274.

    விபீஷணனானவன் தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே.

பக். 278, 279.

    வேர் அற்ற மரம் போலே.

பக். 279, 328.

    சக்கரவர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே.

பக். 281.

    அணுக்கன் இட்டாற்போலே.

பக். 286.

    தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே.

பக். 286.

    பால்குடிக்கும் குழந்தையை, பால் குடித்து வயிறு நிறையக் கண்டு உகக்கும் தாயைப் போலே.

பக். 287.

    முக்தர் இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று.

பக். 288.