|
New Page 1
கைம்முதல் அற்றவன்
முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே.
பக். 291.
விளக்குப் பிணம்
போலே.
பக். 300.
வலி இல்லாதான்
ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே.
பக். 304.
திரவிய குணங்கள்
போலே.
பக். 312.
நாலு நாட்கள் மணற்கொட்டகம்
இட்டு விளையாடுமாறு போலே.
பக். 313.
நாய்ச்சிமாருடைய
கலவியைப் போன்று.
பக். 314,
315.
கலியர் சோறு இட்ட
நாட்களை எண்ணுமாறு போன்று.
பக். 318.
தாய்முகமே பார்த்துக்
கிடக்கும் குழந்தையைப் போலே,
பக். 320.
ராஜமகேந்திரன்
படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று.
பக். 323.
தமப்பன் இல்லாத
இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று.
பக். 326.
தேவசாதிகள் அமுதம்பெற்றுக்
கிருதார்த்தராமாறு போலே.
பக். 326,
327.
கடலில் அமிழ்ந்துவார்
அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே.
பக். 328.
அம்பு எய்வார்
படை திரட்டிக்கொண்டு போமாறு போலே.
பக். 330.
பால் குடிக்கும் குழந்தை
தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு போலே.
பக். 331.
ஆழங்காலிலே இழிவார்
ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே.
பக். 333.
கிண்ணகத்தில் இழிவார்
அறிந்தவர்களைக் கைப்பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே.
பக். 333.
அழிக்கிறவன்
‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே.
பக். 336.
|