|
வ
விரும்புகிற இவளை எங்ஙனே
மீட்கும்படி? 1சரமாவதியிலே நிற்கிற இவளைப் பிரதமாவதியிலே நிற்பார் மீட்கவோ?
2அவ்வூர்ச் சரக்கிலே குற்றமுண்டாகிலன்றோ இவளை மீட்கலாவது? குற்றமுண்டாகிக் கழிந்தது
அன்று. ஜீவன் பரன் என்னும் இருவர்க்கும் பாபம் இல்லாமை முதலானவைகள் உண்டாயிருக்கச்செய்தே,
ஜீவாத்மாவுக்குக் குற்றம் உண்டாகிப் பகவானுடைய திருவருளாலே அது கழியும்; பரமாத்மாகுற்றங்கள்
சேரத் தகுதி இல்லாதவனாகவே இருப்பான்; அப்படியேயாயிற்று, 3அவ்வூரில் மாடங்களில்
இரத்தினங்களும். துவள்-குற்றம். இல் - அது இன்றிக்கே இருக்கை. மா மணி - ஒளியே அன்று;
பெருவிலையனுமாயிருக்கும். ஓங்கு - அவ்வூரில் மாடங்களின் நிழலீடு திருநகரியளவும் வந்து காணும்
இருப்பது. ‘இடமணித்து’ என்று போலே காணும் நாயகன் பிரிந்தது. மாளிகையின் நிழற்கீழே
இட்டு வைத்துக் காணும் பிரிந்தது. 4அவன் பிரிந்தபோது தொடங்கி அவ்வூரையும் அவ்வூரில்
மாடங்களையும் அவற்றில் மாணிக்கங்களையும் பார்த்து, வைத்த கண் வாங்கமாட்டாதே இருந்தாள்போலே
காணும். 3துருப்புக்கூடுபோலே அவ்வூரை அன்றோ இவள் விரும்பியது
1. “தொலைவில்லி மங்கலம்
தொழும் இவளை நீர்” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘சரமாவதியிலே’ என்று தொடங்கி.
சரமாவதி
-ததீயசேஷத்வம். பிரதமாவதி - ஈசுவரனுக்கு அடிமைப்பட்டிருத்தல்.
2. “குற்றம் இல்” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘அவ்வூர்ச் சரக்கிலே’ என்று தொடங்கி. “இல்” என்பது,
அத்யந்தாபாவத்தை
(என்றும் இன்மையை)ச் சொல்லுகிறது என்கிறார்
‘குற்ற முண்டாகி’ என்று தொடங்கி. அதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘ஜீவன் பரன்’ என்று தொடங்கி.
3. “ஓங்கு” என்றதன்
கருத்தை அருளிச்செய்கிறார் ‘அவ்வூரில்’ என்று
தொடங்கி. இதனால் பலித்த பாவத்தை அருளிச்செய்கிறார்
‘இடமணித்து’
என்று தொடங்கி-அதனை விவரணம் செய்கிறார் ‘மாளிகையின்’ என்று
தொடங்கி.
வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை
அம்பல வன்மலையத்து
இருங்குன்ற வாணர் இளங்கொடியே!
இடர்எய்தல் எம்மூர்ப்
பருங்குன்ற மாளிகைநுண்கள
பத்தொளி பாய நும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக்
கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே!
என்பது, திருக்கோவையார், 15. செய்.
4. “தொழும்” என்ற நிகழ்காலத்துக்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அவன்
பிரிந்தபோது’ என்று தொடங்கி.
5.
‘துருப்புக் கூடுபோலே’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
இன்னார் இனியார் என்னாதே,
அவ்வூரில் எல்லாரையும் விரும்பினாள்
என்பது. துருப்புக் கூடு - தூற்றாதபொலி. “திருவாரூர்ப் பிறந்தார்கள்
எல்லார்க்கும் அடியேன்” என்பது, சுந்தரமூர்த்தி நாயனார் தேவா.
திருத்தொண்டத் தொகை.
|