பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன

ஒன்பதாந்திருவாய்மொழி - ‘என்றைக்கும்’

 முன்னுரை

    ஈடு : 1மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும் தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க, ‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர். அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி. இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய், நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்? இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன, ‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான். இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக்கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?

    2
இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன, ‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்கவேணுமோ? கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,

____________________________________________________________________________

1. சர்வேஸ்வரனுடைய தன்மையை அருளிச்செய்துகொண்டு, மேல் திருவாய்மொழியோடு
  இத்திருவாய்மொழிக்கு இயைபு அருளிச்செய்கிறார் ‘மேலே’ என்று தொடங்கி.
  ‘பலகாலும்’ என்றது, ‘உண்ணிலாவிய’ என்ற திருவாய்மொழி முதலிய பல
  திருவாய்மொழிகளிலும் என்றபடி.

2. கேட்கும்படியைக் காட்டுகிறார், ‘இச்சம்சாரத்திலே’ என்று தொடங்கி. ‘பாசங்கள்’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றிக் ‘கண்ட எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி’ என்கிறார்.