அதற
344 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அதற்கு அடியான கர்மத்
கிடந்ததாகில், வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன, ‘அவையும்
கிடக்கச்செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி
என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று; ஆகையாலே, என்னை இங்கு
வைக்கிறது என்?’ என்று 1வடிம்பிட்டுக் கேட்க, 2‘நீர்தாம் உம்மை
நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே, ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்று! ஆன பின்பு
நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக்கடவோம் அன்றோ? ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப்
பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ? ஆன பின்பு, உம்மைக்கொண்டு, ஸ்ரீ வீடுமரைப்
பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுத்தாற்போலே,
நமக்கும் 3நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப்
பார்த்தோம்: அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை
அருளிச்செய்தான்.
அருளிச்செய்ய,
இவரும் அதனை அநுசந்தித்து. சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்தாகமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய்
இருக்கிற அவன், தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை கின்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச்சொன்ன
வார்த்தையைப் 4பொறுக்கமாட்டிற்றிலர். 5‘தனக்குச் சில பிரபந்தங்கள்
வேண்டினால், அதற்குத்
______________________________________________________________________________
1. வடிம்பிட்டு-நிர்ப்பந்தித்து.
2. ‘பிரபந்தங்களைப் பண்ணுவிக்கப்
பாரத்தோம்’ என்று உத்தரம் சொல்லப் பார்த்து,
‘ஆனால், என் ஆற்றாமை எல்லாம் கிடக்கத்
தன் காரியம் ஒன்றுமே
பார்க்குமத்தனையோ?’ என்கிற சங்கையையும் பரிகரிக்கிறார், ‘நீர்தாம்’
என்று தொடங்கி.
ஓக்கி வைக்க-ஆக்கி வைக்க. ‘தனக்கேயாக’ என்பது, திருவாய். 2. 9 : 4.
வெளிச்சிறப்பை
-ஞானப்பிரகாசத்தை.
3. ‘கண்டு கொண்டுஎன்
கண்ணிணைஆ ரக்களித்துப்
பண்டை வினையாயின
பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுதுஉண்ணச்
சொன்மா லைகள்சொன்னேன்
அண்டத் தமரர்
பெருமான் அடியேனே.’
என்பது, திருவாய். 9. 4 : 9.
4. ‘பொறுக்கமாட்டிற்றிலர்’
என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘என்சொல்லி
நிற்பன்?’ என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்
பற்றி.
5. ‘இன்கவி பாடும் பரம கவிகள்,’
‘ஒப்பிலாத் தீவினையேனை’ ‘எதுவும் ஒன்றும் இல்லை
செய்வது’ என்பன போன்றவைகளைக்
கடாட்சித்துத் தனக்குச் சில பிரபந்தங்கள்’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
|