த
346 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
திருவாய்மொழி
பாடுவித்துக்கொண்ட உபகாரத்தைச் சொல்லித் தரிக்க
மாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
1‘இப்படி
நீர் படுகைக்கு அவன் செய்த நன்மைதான் யாது?’ என்ன, ‘இது’ என்கிறார்: போகிய அன்றைக்கு அன்று
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு -சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீகரித்தால், பின்னர்
அவ்வங்கீகாரந்தன்னையே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் சொல்லி உஜ்ஜீவக்கலாயிற்று
இருப்பது. 2‘கண்ணபிரானுடைய அந்த விஸ்வரூபத்தையும் நினைக்க எனக்கு வியப்பானது அதிகமாய்
உண்டாகிறது! பின்னும் பின்னும் சந்தோஷம் அடைகிறேன்!’ என்கிறபடியே, பின்னர் என்றும் ஒக்க
அதனை நினைத்துத் தரிக்கலாம்படியாயிற்று இருப்பது. 3‘ஸ்ரீராம பிரானுடைய பாணங்களை நினைத்துக்கொண்டு
வருத்தம் உற்றான்’ என்கிறபடியே, அம்புக்கு இலக்கானார் அலற்றுமாறுபோலேயாயிற்று, குணத்துக்கு
இலக்கு ஆனாரும் அலற்றும்படி. 4அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்; குணத்தால்
வந்த புண்ணுக்கு மாற்று இல்லை அன்றோ? 5ஆக, சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீ
______________________________________________________________________________
1. பதத்துக்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.
2. ‘ஒரு நாள் விஷயீகரித்தால்
என்றும் ஒக்க அதனை அநுசந்தித்துத் தரிக்கலாய்
இருக்கும், என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘கண்ணபிரானுடைய’ என்று
தொடங்கி.
‘தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய
ரூபம் அத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜக்
ஹ்ருஷ்யாமி ச புந : புந:’
என்பது, ஸ்ரீ கீதை, 18 : 77
3. அவனுடைய குணங்கள்
இப்படி ஈடுபடுத்தும் என்பதற்கு வியதிரேகத்தால் திருஷ்டாந்தம்
காட்டுகிறார், ‘ஸ்ரீ ராமனுடைய’ என்று
தொடங்கி.
‘ப்ரஹ்மதண்ட ப்ரகாசாநாம்
வித்யுத் ஸத்ருச வர்ச்சஸாம்
ஸ்தரந் ராகவ பாணாநாம்
விவ்யதே ராக்ஷஸேஸ்வர:’
என்பது, ஸ்ரீ ராமா. யுத். 60 :
3.
இங்கே, கம்பராமாயணம், யுத்தகாண்டம்,
கும்பகர்ணன் வதைப்படலம், 19 முதல் 23
முடிய உள்ள செய்யுள்களைப் படித்தறிதல் தகும்.
4. ‘அம்பு போன்று குணங்கள்
பாதகமாமோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அம்பு பட்ட புண்’ என்று தொடங்கி.
5. மேலே
கூறியவற்றை எல்லாம் முடிக்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.
|