கர
ஒன்பதாந்திருவாய்மொழி
-
பா. 1 |
347 |
கரித்தால், அது தன்னையே
என்றும் ஒக்க நினைக்கலாம்படி இருக்குமாயிற்று. ‘இப்படிப்பட்ட அங்கீகாரத்தை ஒருகால் செய்துவிட்ட
இத்தனையோ?’ என்னில், போகிய அன்றைக்கு அன்று-கழிகிற நாள்தோறும் நாள்தோறும் இப்படியே
ஆயிற்று அங்கீகரித்தது. 1இதுதான் இருவர் படிகளாலும் ஆற்றப்போகாது. 2அவனுடைய
அங்கீகாரத்துக்கு இலக்கான இவர் படியைப் பார்த்தால், அதனை இவர் தாம் பொறுக்க வல்லர் அல்லர்;
அவனோ என்னில், தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று
வருந்துமாறு போலே, எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று
இருக்கும் ஒருவன்.
என்னைத் தன்னாக்கி
- 3‘அறிவிலேன்’ என்கிறபடியே அறிவின்மை, ஆற்றல் இன்மை இவைகளுக்கு இலக்காய்
இருக்கிற எனை, தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளையுடையேனாம்படி செய்து. அன்றிக்கே,
‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல். என்னால் தன்னை - தன்னாலே சத்தியைப் பெற்றவனான
என்னாலே, வேதங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலானவைகட்கும் அறிய முடியாதவனாய் இருக்கிற
தன்னை. 4‘அந்த ஆனந்த குணம் ஒன்றினின்றும் எந்த வேத வாக்குகன்
______________________________________________________________________________
1. ‘மேலே போந்த இரண்டு
பதங்களாலும் பலித்த அர்த்தம், இவருடைய ஆதரமும்
அவனுடைய வியாமோகமும்’ என்று அருளிச்செய்கிறார்,
‘இதுதான்’ என்று தொடங்கி.
இதுதான்-உய்யக்கொண்ட இந்த விஷயீகாரந்தான்.
2. இதனை விவரணம் செய்கிறார்,
‘அவனுடைய’ என்று தொடங்கி. என்றது, ‘இவர்
செய்ந்நன்றி அறியுமவராகையாலும், அவன் ‘உன் அடியார்க்கு
என்செய்வான்?’
(பெரிய திருவந். 53) என்று இருக்கும் தன்மையனாகையாலும், இவராலும்
ஆற்றப்போகாது
என்றபடி. ‘பொறுக்க வல்லர் அல்லர்’ என்றது, ‘கைம்மாறு தேடித்
தடுமாறுவர்’ என்றபடி. மடி
தடவுகை-மடியிலுள்ள பொருளைக் களவு காணுதல்.
3. ‘அறிவிலேன்’ என்பது. திருவாய்,
5 7 : 1. தன்னுடையேனாம்படி-தனக்குச் சேஷமாம்படி.
4. வேதங்கள் ஸ்மிருதிகள்
முதலானவைகளால் அறியமுடியாதவன் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார், ‘அந்த ஆநந்த குணம்’ என்று
தொடங்கியும்,. ‘என்னால்’ என்று
தொடங்கியும்.
‘யதோவாசோ நிவர்த்தந்தே
அப்ராப்ய மநஸா ஸஹ’
என்பது, தைத்திரீய.
ஆன. 9.
|