பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

348

திருவாய்மொழி - ஏழாம் பத்து

திரும்பினவோ?’ 1‘என்னால் அறிய முடியாது என்று இருக்குமவனுக்கு அறியப்படுவது, அறிந்தேன் என்று இருக்குமவர்கட்கு அறியப்படாதது’ என்கிறபடியே, பிரமாணங்களால் அறியமுடியாமல் இருக்கிற தன்னை. இன் தமிழ் பாடிய - 2இதுதன்னில் ஓடுகிற அர்த்தமும் பரிமாற்றமும் கிடக்கச் செய்தே, சொல்லில் இனிமை தானே கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. பாடிய - ‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்; 3பாடினான் என்னுதல். 4‘இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்று முத்தன் ஸாமகானம் பண்ணுமாறு போலே, அவனும் இவருடைய அனுபவத்தால் வந்த உவகைக்குப் போக்கு விட்டுத் ‘தென்னா’ என்று பாடுமாயிற்று.

    5
‘இப்படி இனிய இது உண்டானபடி எங்ஙனே?’ என்னில், ஈசனை-சொல்ல வேணுமோ? சர்வேஸ்வரன் செய்யமாட்டாதது உண்டோ? அரிதோ அவனுக்கு? 6‘கவி பாடினது நீராய் இரா நின்றீர்; அவனைப் பாடினானாகச் சொல்லாநின்றீர்; இதுதான் செய்தபடி என்?’ என்ன, ஆதியாய் நின்ற-‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’

______________________________________________________________________________

1. ‘யஸ்யாமதம் தஸ்யமதம் அவஜ்ஞாதம் விஜாநதாம்’

என்பது, கௌஷீதகீ உபநிடதம்.

2. ‘இன்’ என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘இதுதன்னில்’ என்று தொடங்கி.
  இதுதன்னில் -இத்திருவாய்மொழிதன்னில். ஓடுகிற அர்த்தமாவது, திருவாய்மொழி
  பாடுவித்துக்கொள்ளுதல், பரிமாற்றமாவது, சர்வேஸ்வரனுடைய வியாமோஹம்.

3. ‘பாடினான்’ என்றது, ‘என் முன் சொல்லும்’ என்கிறபடியே. முன்னே சந்தை
  சொன்னான் என்றபடி.

4. ‘சொன்ன’ என்னாது, ‘பாடிய’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இந்த ஸாமத்தை’
  என்று தொடங்கி. ‘ஏதத் ஸாமகாயந் நாஸ்தே’ என்பது, தைத். பிரு. 10. ‘தென்னா’
  என்பது, திருவாய். 10. 7 : 5.

5. ‘இப்படி இனிமை உண்டானது அவன் சர்வசத்தி ஆகையாலே’ என்னுமதனைச்
  சங்கை முன்னாக அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.

6. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘கவி பாடினது’ என்று தொடங்கி.

7. ‘பாசுரத்துக்குக் காரணபூதன் இவன்,’ என்கிறார், நான் கவி பாடுகைக்கு’ என்று
  தொடங்கி. இதனை விவரணம் செய்கிறார், ‘அவன் அடியாக’ என்று தொடங்கி.